விஜயகுமார் பேத்தி திருமணத்தில் அன்பு நிறைந்து இருந்தது.. தியா செம போல்டு.. மேக்கப் ஆர்டிஸ்ட் பேட்டி!

சென்னை: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும், விஜயகுமார் வீட்டில் நடக்கும் திருமணத்தை பற்றியே பேச்சாக உள்ளது. திருமணத்திற்கு முன்பு தான் அப்படி என்று பார்த்தால், திருமணத்திற்கு பிறகும், கோலாகலமாக நடந்த திருமணத்தை பற்றியே பேசி வருகின்றனர்.அந்த வகையில் மேக்கப் ஆர்டிஸ்ட் பிரக்ருதி பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் நடிகர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர், 1969 ஆம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.

makeup artist prakruthi interview about vijay kumar grand daughter wedding

விஜயகுமார் வீட்டில் விசேஷம்: விஜயகுமார்- முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள் தான் விஜய், அனிதா, கவிதா அதில் அருண் விஜய் அப்பாவை போல நடிகராக இருக்கிறார். மேலும், இவரின் சகோதரியான கவிதா மற்றும் அனிதா இருவருமே மருத்துவர்கள். இதில், அனிதா மருத்துவரை திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். இவர்களின் மகளான தியாவிற்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக மகாபலிபுரம் ரெஸ்டாரண்டில் ஏற்பாடுகள் படுஜோராக இருந்தன. இந்த திருமணத்தில் சூப்பர் ரஜினிகாந்த், மீனா,சினேகா, பிரசன்னா என பலர் கலந்து கொண்டனர்.

makeup artist prakruthi interview about vijay kumar grand daughter wedding

வனிதா இல்லை: அதுமட்டுமில்லாமல் விஜயகுமார் குடும்பத்தை சேர்ந்த கவிதா, அனிதா, அருண்விஜய், ப்ரீத்தி, ஸ்ரீதேவி அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகளான வனிதா மட்டும் கலந்து கொள்ளவில்லை. சொத்துபிரச்சனை காரணமாக விஜயகுமாருக்கும் இவருக்கும் பயங்கர பிரச்சனை வெடித்தது. அதில் இருந்து விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்படும் வனிதாவை ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனால்,வனிதாவின் மகன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

makeup artist prakruthi interview about vijay kumar grand daughter wedding

மேக்கப் ஆர்டிஸ்ட் பிரக்ருதி: இந்நிலையில்,கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தில் மணப்பெண்ணான தியாவிற்கு மேக்கப் போட்ட மேக்கப் ஆர்டிஸ்ட் பிரக்ருதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், திருமணம் திருவிழாப் போல நடந்தது. இந்த சந்தோஷத்தை பார்க்க இரண்டு கண்கள் போதாது. அனைவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் இருப்பதை பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அதே போல, நான் தியாவிற்கு மேக்கப்போடும் போது ஒவ்வொருத்தரா வந்து ஒகேவா, எதாவது வேணுமாக என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். இந்த திருமணத்தில் மொத்தமா அன்பு நிறைந்து இருந்தது.

தியா செம போல்ட்: அதே போல, தியாவும் ரொம்ப போல்டான ஆள், அவர் கண் அருகே ஒரு பெரிய மச்சம் இருக்கும், மற்றவர்களாக இருந்தால், அதை மறைக்க சொல்லுவார்கள் ஆனால், அவர் அதைமறைக்க சொல்லவே இல்லை. இதுதான் நான், நான் அதை மறைக்கவேண்டும் என்று மச்சம் தெரியும்படியே மேக்கப்போட சொன்னார். உண்மையில் அது பெரிய விஷயம். தியா அப்படி சொன்னதை நான் பாராட்டினேன் என்று மேக்கப் ஆர்டிஸ்ட் பிரக்ருதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X