விஜய்யும் சங்கீதாவும் பிரிவா?.. யார் சொன்னது?.. ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடவிருக்கிறது. இதற்கிடையே விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்துவருவதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் இதுகுறித்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் பேசியிருக்கிறார்.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் அவர். அவரது அரசியல் வருகை அவரின் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்தாலும் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தனது கடைசி படமாக தளபதி 69ல் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்: ஒருபக்கம் கடைசி படத்தில் நடித்துவரும் அவர்; மறுபக்கம் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் அரசியல் மேடைகளில் முழு மூச்சாக செயலாற்றி வருகிறார். முதலில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்திய அவர் தனது அரசியல் எதிரி திமுகவும் பாஜகவும் என்று முழங்கினார். அன்றிலிருந்து விஜய்யையும், அவரது அரசியல் செயல்பாட்டினையும் திமுகவினர் மிக கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.
விசிக Vs தவெக: அடுத்ததாக எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு; இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுப்பதாக மீண்டும் திமுகவை சாடினார். ஆனால் தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை; விஜய்க்கு தன்னை சுற்றித்தான் மனம் இருந்திருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் ஓபனாக பேசினார். அதேபோல் விசிக எம்பி ரவிக்குமாரும் பதிலடி கொடுத்தார்.
மனைவியை பிரிந்த விஜய்?: இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்துவிட்டார்கள். சங்கீதா இந்த சண்டையின் காரணமாகத்தான் வெளிநாட்டில் இருக்கிறார். மேலும் இரண்டு பேரும் பிரிந்ததால்தான் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு சங்கீதா வரவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த விஷயத்தை வைத்தும் விஜய்யை திமுகவினர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் பேட்டி கொடுத்திருக்கிறார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் விஜய்யின் தீவிரமான ரசிகை. அவருடைய வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. இருப்பினும் அவரது மனைவி சங்கீதா மற்றும் மகனை சந்தித்தேன். இரண்டு முறை அந்த வீட்டில் வைத்து சங்கீதாவுக்கு மேக்கப் போடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாகத்தான் அவரது வீட்டுக்கு சென்றேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











