மகள் படிப்பிற்காக பணம் கேட்டேன்.. அசிங்கப்படுத்தி ஒரு டைப்பா பேசிய கமல்.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: தமிழ் திரையுலகில் நடிகர்களை தாண்டி திரைக்கு பின்னால் வியக்க வைத்தவர்களின் உழைப்பை யாரும் பாராட்டாமல் இருந்ததில்லை. சிலரது பெயர்கள் கவனிக்கப்படாமல் இருந்திருக்கலாம். சினிமாவில் நடிகர்களின் முக பாவனையில் இருந்து அவர்கள் அணியும் உடை வரைக்கும் மக்களை கவரும் வகையில் இருப்பதை அறிவோம். அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் மேக்கப் மேன்கள். சினிமாவில் மேக்கப் மேன்களின் வாழ்க்கை குறித்த படங்களோ அவர்களின் கதையோ கேட்பது குறைவு தான். ஆனால், மேக்கப் மேனாக வாழ்க்கையை தொடங்கி காமெடி நடிகராகவும் வலம் வரும் சீனியர் மேக்கப் மேன் புஜ்ஜி பாபு தனது சினிமா வாழ்வில் நடந்த அனுபவங்களையும் கசப்பான உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் லெஜண்ட் நடிகர்களான எம்ஜிஆர், ரஜினி, கமல், பிரசாந்த், விஜய் போன்ற நடிகர்களுக்கு மேக்கப் மேனாக இருந்தவர் புஜ்ஜி பாபு. இவர் காமெடி நடிகர் சந்தானத்திற்கும் மேக்கப் மேனாக இருந்துள்ளார். மேக்கப் மேனாக இருந்தவரை நடிகனாக மாத்தி அழகு பார்த்தவர் சந்தானம். தலைவா, கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக கண்ண லட்டு தின்ன ஆசையா படத்தில் புஜ்ஜி பாபு காமெடிகள் அதிக வரவேற்பை பெற்றன. அதற்கு காரணம் சந்தானம் என்று புஜ்ஜி பாபுவே தெரிவித்திருக்கிறார். மேலும், சந்தானத்திற்கு 15 வருடங்களாக மேக்கப் மேனாக இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

Makeup man bujji Babu said he was humiliated by Kamal for asking for financial help

கமல் சாருக்கும் எனக்கும் செட் ஆகாது: தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்த புஜ்ஜி பாபு நடிகர் கமல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "கமல் சார் நடித்த விக்ரம் படத்தில் தான் மேக்கப் மேனாக இருந்தேன். அதற்கு முன்னாடி பல படங்களில் இருந்திருக்கிறேன். விக்ரம் படத்தில் மேக்கப் மேனாக இருந்த போது ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது என்னை அங்கு அழைத்தார். நான் போக மறுத்துவிட்டேன். இங்கு நான் தமிழ் , தெலுங்கு பட நடிகர்களுக்கு மேக்கப் போடும் வேலை இருந்தது. அவர் ஒருவருக்காக என்னால் போக முடியவில்லை. பிறகு ஒரு நாள் கமல் சார் போன் பண்ணி என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்தார். நானும் அவரை பார்த்து பேசினேன். அப்போது எனக்கு மேக்கப் மேனாக வருவீர்களா என கமல் சார் கேட்டார். நான் அவரிடம் உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது சார் என்று கூறிவிட்டு வந்து விட்டேன். நான் அவரிடம் வேலை கேட்டு செல்லவில்லை. வேலை கேட்டு சென்றால்தான் பயப்பட வேண்டும்" என புஜ்ஜி பாபு தெரிவித்தார்.

அசிங்கப்படுத்திய கமல்: கமல் நடித்த குருதிப்புனல், இந்தியன் படம் வரைக்கும் கமல் சாருக்கு மேக்கப் மேனாக இருந்தேன். அந்த நேரத்தில் வீட்டில் பணம் இல்லை. சினிமா படப்பிடிப்பிலும் தடங்கல் ஏற்பட்டது. எனது பெரிய மகள் எம்.சி.ஏ படித்துக்கொண்டிருந்தார். யாரிடம் பணம் கேட்பது என்று தெரியவில்லை. கமல் சாரிடம் கேட்கலாம் என முடிவு செய்து அவரை சந்தித்து பெரிய பாப்பா படிக்கிறாங்க. அவங்களுக்கு பீஸ் கட்டணும். பண உதவி செய்யுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் மிக கடுமையாக திட்டி பேசினார். அது மனம் வருத்தமாக இருந்தது. இவ்வளவு கஷடப்பட்டு ஏன் இவங்க கிட்ட அடிமையா வேலை செய்யணும் தோணுச்சு. அதன் பிறகு அவர் படங்களில் மேக்கப் போட போவதில்லை என முடிவெடுத்தேன். ஒரு நாள் இயக்குநர் ஷங்கர் சார் போன் பண்ணி கூப்பிட்டாரு. ஏன் கமல் சாருக்கு மேக்கப் போட வரலை என கேட்டார். வேணாம் சார் எனக்கு அங்கு வர விருப்பம் இல்லை என கூறிவிட்டேன். ஒரு நாள் மேக்கப் சரியாக வரவில்லை என்றால் அன்று திட்டியதற்காக இப்படி பண்ற என பேசுவார் என மனதில் நினைத்து கொண்டு போகவில்லை என புஜ்ஜி பாபு தெரிவித்தார்.

Makeup man bujji Babu said he was humiliated by Kamal for asking for financial help

சந்தானம் செம மனுஷன்: இதன் பிறகு சந்தானத்துடன் பயணித்து வருவது குறித்து தெரிவித்த புஜ்ஜி பாபு, சந்தானம் இந்தியில் ஒரு படம் நடிக்க கமிட் ஆகியிருந்தார். அவருக்கு இந்தி தெரியாது. நான்தான் அவருக்கு உதவியாக பாலிவுட் சென்றேன். அந்த நேரத்தில் சிங்கம் படத்தை மிஸ் பண்ணிட்டேன். ரொம்ப வருத்தமாக இருந்தது. பிறகு சந்தானம் என்னை நன்றாக பார்த்துக்காெண்டார். தினமும் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுதான் மேக்கப் போடுவார். அதே மாதிரி நண்பர்களை அவரை மாதிரி யாரும் பார்த்துக்க முடியாது. சமீபத்தில் கலக்கப்போவது யாரு ராம்பாலா சாருக்கு ஹார்ட் ஆஃபரேஷனுக்கு அவர் தான் உதவி செய்தார். சுகர் வந்து காலை இழந்த உதய் குடும்பத்தை இப்பவரைக்கும் அவர்தான் பார்த்துட்டு வருகிறார். சந்தானம் நிறைய பேருக்கு பணம் உதவி செய்து வருவதை நானே பார்த்திருக்கிறேன். ஆனால், சிலர் அவரை ஏமாற்றிவிட்டனர். 5 லட்சம், 10 லட்சம், ஒரு நேரத்தில் 2 கோடி வரை இழந்து விட்டார். இதனால் சந்தானமும் இப்போ ரொம்ப டைட்டா இருக்காரு. யாராச்சும் உதவின்னு வந்து கேட்டா கொஞ்சம் தயங்குறாரு. பணம் வாங்கி ஏமாத்திட்டாங்க என புஜ்ஜி பாபு தெரிவித்தார்.

விஜய் கட்டி பிடிச்சுட்டாரு: தலைவா படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் நடித்த அனுபவத்தை புஜ்ஜி பாபு பகிர்ந்தார். அப்போது பேசிய அவர், தலைவா படத்தில் சமையல்காரரா தம்பி ராமையா நடிக்க வேண்டியது. அவங்க வராததுனால நான் நடிச்சேன். முதலில் என்னை பார்த்த விஜய் சார் ரொம்ப தயங்கினாரு. எப்ப்டி இவர் நடிப்பாருன்னு கேட்டாரு. ஏ.எல்.விஜய் சார் சொன்ன வசனத்தை பேசி காட்டுனதும் விஜய் சார் என்னை கட்டிப்பிடிச்சு வாழ்த்து தெரிவித்தார். ரொம்ப பாராட்டி பேசினாரு. அதே மாதிரி சமீபத்தில் மீன் மார்க்கெட் போயிட்டு இருந்தேன் அப்போ விஜய் சார் காரில் என் பின்னாடி வந்து சர்ப்ரைஸ் செய்து எப்படி இருக்கீங்க அடுத்து படம் நடிக்கலாமா நாம ரெண்டு பேரும் என பேசியது ஆச்சரியமாக இருந்தது. பைரவா படப்பிடிப்பிற்காக சென்ற நேரத்தில் என்னை பார்த்து மீண்டும் கட்டிப்பிடித்து பேசினார். அவர் மாதிரி மனுஷனே பார்த்தது இல்லை. தலைவா படத்தில் என்னை வேண்டாம் சொன்னவரு நடிப்பை பார்த்துட்டு பாராட்டி பேசிட்டு போனது ஆச்சரியம் தான் என விஜய்யை பாராட்டி பேசியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X