மரத்தில் இருந்து தவறி விழுந்தார். பிரபல ஹீரோவின் மேக்கப் மேன் திடீர் பலி.. திரையுலகம் இரங்கல்!
கொச்சி: பிரபல ஹீரோவின் மேக்கப் மேன் திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மலையாள ஹீரோ நிவின் பாலி. அங்கு முன்னணி நடிகராக இருக்கிறார்.
இவர் மலையாளம் மற்றும் தமிழில் உருவான, நேரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.

மொழிமாற்றம்
அல்போன்ஸ் புத்திரனின் பிரேமம் படம் மூலம் இன்னும் பிரபலமானார். கவுதம் ராமச்சந்திரன் இயக்கிய ரிச்சி என்ற நேரடி தமிழ்ப் படத்திலும் நடித்தார். இந்த படம் பெரிதாக கவனிக்கப் படவில்லை. இதையடுத்து அவர் நடித்த சில மலையாளப் படங்களில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

ஷாபு புல்பள்ளி
ஆனால், அந்தப் படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இப்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மேக்கப் மேனாகவும் உதவியாளராகவும் இருந்தவர், ஷாபு புல்பள்ளி. கடந்த சில வருடங்களாக நிவின் பாலிக்கு மேக்கப் மேனாக பணியாற்றி வந்த இவர், இன்டஸ்ட்ரியில் நன்கு அறியப்பட்டவர்.

கிறிஸ்துமஸ் ஸ்டார்
இவர் கிறிஸ்துமஸ் வருவதை ஒட்டி, வீட்டருகில் இருந்த மரத்தில் கிறிஸ்துமஸ் ஸ்டாரை கட்டுவதற்காக ஏறினார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில், அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 37.

துல்கர் சல்மான்
இதை, மலையாளத் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் துல்கர் சல்மான் உட்பட பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











