twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவின் முதல் டைம் லூப் பாணியிலான படம்... சவாலாக இருந்ததாக இயக்குநர் பெருமிதம்

    |

    சென்னை : அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜாங்கோ.

    டைம் லூப் பாணியில் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓவர் பொஸஸிவ்னஸ் வேண்டாம் பிரியங்கா… அதுக்கு அவன் வொர்த் இல்ல… நெட்டிசன்ஸ் அட்வைஸ் !ஓவர் பொஸஸிவ்னஸ் வேண்டாம் பிரியங்கா… அதுக்கு அவன் வொர்த் இல்ல… நெட்டிசன்ஸ் அட்வைஸ் !

    இந்நிலையில் இந்தியாவில் முதல் டைம் லூப் பாணியிலான படத்தை எடுத்தது சவாலாக இருந்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ஜாங்கோ படம்

    ஜாங்கோ படம்

    நடிகர் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக், அனிதா சம்பத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜாங்கோ. டைம் லூப் பாணியில் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள முதல் படம் இது என படக்குழுவினர் தெரிவித்துள்ளார். படத்தை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன்.

    19ம் தேதி ரிலீஸ்

    19ம் தேதி ரிலீஸ்

    திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை சிறப்பாக அமைந்த நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

    ஒரே நாளின் நிகழ்வு

    ஒரே நாளின் நிகழ்வு

    ஒரே நாளில் நிகழும் வித்தியாசமான நிகழ்வுகளின் கூட்டாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முதல் டைம் லூப் பாணியிலான திரைப்படத்தை எடுத்தது மிகவும் சவாலாக இருந்ததாக படத்தின் இயக்குநர் மனோ கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    சவாலான திரைக்கதை

    சவாலான திரைக்கதை

    முதலில் படம் பார்ப்பவர்களுக்கு தன்னுடைய கான்செப்ட் புரியும் வண்ணம் திரைக்கதை அமைப்பது மிகவும் சவாலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கென பலமுறை திரும்ப திரும்ப படப்பிடிப்பை எடுக்க வேண்டி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    தயாரிப்பாளருக்கு நன்றி

    தயாரிப்பாளருக்கு நன்றி

    மேலும் தயாரிப்பாளர் தனக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்து படம் நல்லமுறையில் உருவாக காரணமாக இருந்ததற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் இசையால் மிரட்டலான காட்சிகள் அமைய காரணமாக இருந்த இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் அவர் பாராட்டு கூறியுள்ளார்.

    சிறப்பான ட்ரெயிலர்

    சிறப்பான ட்ரெயிலர்

    படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் தீபாவளியையொட்டி வெளியான எனிமி மற்றும் எம்ஜிஆர் மகன் என இரு படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார் மிருணாளினி ரவி. இந்நிலையில் ஜாங்கோ படத்தில் அவர் சதீஷுக்கு ஜோடியாகியுள்ளார்.

    குவியும் பாராட்டுக்கள்

    குவியும் பாராட்டுக்கள்

    படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ஜாங்கோ அமைந்துள்ளது. சவாலான திரைக்கதை மற்றும் பாணியை எடுத்து படம் இயக்கியுள்ள அறிமுக இயக்குநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் படம் அதை பூர்த்தி செய்யுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Jango movie making is challenging -Director says
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X