எலியோட மல்லுக்கட்டிய மான்ஸ்டர் படம்... படத்தோட மேக்கிங் வெளியாகியிருக்கு
சென்னை : எலியை வைத்து ஒரு சிறப்பான படத்தை கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கான பதில்தான் மான்ஸ்டர் திரைப்படம்.
எலியை சுற்றியே நடைபெறும் இந்த படத்தில் ஹீரோ எஸ்ஜே சூர்யா அதனுடன் படும் பாடுகளை நகைச்சுவையாக படம் பிடித்திருப்பார்கள்.
நமக்கும் அவரது பாடுகள் பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் கூடவே சிரிப்புக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

மான்ஸ்டர் திரைப்படம்
எஸ்ஜே சூர்யா நடிப்பில் கடந்த 2019ல் வெளிவந்த மான்ஸ்டர் திரைப்படம் மான்ஸ்டர். எஸ்ஜே சூர்யாவை விட இந்த படத்தில் எலிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். படத்தில் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் குறைவில்லாமல் இருந்தது. மேலும் சிறப்பான எண்டர்டெயினராகவும் படம் காணப்பட்டது.

சிறப்பான படம்
எலியுடன் இந்த படத்தில் மல்லுகட்டியிருப்பார் நடிகர் எஸ்ஜே சூர்யா. ஒவ்வொரு காட்சியும் சிரிப்பில் நம்முடைய கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தன. ஒரு நான்கைந்து கேரக்டர்களை மட்டுமே வைத்து சிறப்பான படத்தை கொடுக்க முடியும் என்பதை டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் படத்தில் நிரூபித்திருந்தார்.

ஒரிஜினல் எலியை வைத்து காட்சிகள்
மேலும் படத்தில் திரைக்கதையும் பாராட்டும்வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஒரிஜினல் எலியை வைத்து அனைத்து காட்சிகளையும் படக்குழுவினர் இந்த படத்தில் எடுத்ததாக தெரிவித்துள்ளனர். எலியின் நடமாட்டத்திற்காக காத்திருந்து காட்சிகளை எடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
சிறப்பான விளக்கங்கள்
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் எவ்வாறு எலியை வைத்து காட்சிகள் வடிவமைக்கப்பட்டது என்பது குறித்த விளக்கங்களுடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











