Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
தாத்தா 'சீதக்காதி'யின் மேக்கிங் வீடியோ... சூப்பர் சிங்கரில் பாருங்க!
விஜய் சேதுபதி நடித்துள்ள 'சீதக்காதி' படத்தின் மேக்கிங் வீடியோ வரும் 15ம் தேதி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெளியாகிறது.
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சீதக்காதி' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேசன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம் மற்றும் அருண் வைத்யநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீதக்காதி. நடுவுல சொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்ககியுள்ளார்.
வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். எனவே இதனை சிறப்பான முறையில் விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா இதில் நடித்திருக்கிறார். மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைத்த படக்குழு, பிளானட் ஆப் தி ஏப்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு மேக்கப் மேனாக வேலை செய்த கேவின் ஹானேவை ஒப்பந்தம் செய்தது. அவரது ஆசோனையின் படி விஜய் சேதுபதியின் ஒப்பனை நடைபெற்றது.
இந்தியன் தாத்தாவையும், முதல்வன் ரகுவரனையும் சேர்த்து செய்த கலவை போல் காட்சியளிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த மேக்கப் போட சுமார் 4 மணி நேரம் ஆகும். அதன் மேக்கிங் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை, 15ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியின் போது, மேக்கிங் ஆப் அய்யா... தி ஜர்னி எனும் அந்த வீடியோவை படக்குழு வெளியிடுகிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்