தனுஷ், சாய் பல்லவி பென்டை நிமிர்த்திய பிரபுதேவா: வீடியோ இதோ
Recommended Video

சென்னை:ரவுடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஹிட்டானது. யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.

ரவுடி பேபி பாடல் யூடியூபில் 25 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவுடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.
தனுஷ் பட பாடலுக்கு கோரியோகிராப் செய்ய வேண்டும் என்று கேட்டதுமே பிரபுதேவா ஒத்துக் கொண்டதாக பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். பாடலை கேட்காமலேயே ஒப்புக் கொண்டாராம் பிரபு தேவா.

ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவாவின் நடனம் மிகப் பெரிய பலம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் அந்த பாடலுக்கு பெரிய பலமாக அமைந்தது. தனுஷ், சாய் பல்லவி ஆகிய இருவருமே நன்றாக நடனம் ஆடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications