Saamaniyan: மக்கள் நாயகன் இட்ஸ் கம்பேக்.. சாமானியன் படம் எப்படி இருக்கு.. பொதுமக்கள் கருத்து!

சென்னை: தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ராமராஜன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சாமானியன். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், படம் பார்த்த பொதுமக்களின் கருத்தை இப்போது பார்க்கலாம்.

இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும். இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், கே எஸ் ரவிக்குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்கும் சாமானியனுக்கு கோபம் வந்தால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குநர்.

Makkal Nayagan Ramarajan s saamaniyan public review

சாமானியன் திரைப்படம்: பரபரப்பாக ஒரு வங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்போது சாமானிய மனிதன் ஒருவன் அந்த வங்கிக்குள் நுழைந்து டைம் பாம், துப்பாக்கி போன்ற பொருட்களை எல்லாம் காட்டி மேனேஜரை மிரட்டுகிறார். வங்கியின் உள்ளே அனைவரும் பயந்து போக, அந்த வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் அந்த சாமானியன் கொண்டு வருகிறார். இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிய வந்து வங்கியை போலீஸ் சூழ்ந்து விடுகிறது. பின் மீடியாவிற்கும் இந்த விவகாரம் தெரிய வருகிறது. வங்கியையும் அங்கு இருக்கும் மக்களையும் மீட்க அந்த சாமானியன் வைக்கும் கோரிக்கை என்ன... சாமானியன் ஏன் அந்த வங்கியை கைப்பற்றினார் என்பது தான் படத்தின் கதை.

படம் நல்லா இருக்கு: படம் ரொம்ப நல்லா இருந்தது, ராமராஜனுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு கம்பேக் திரைப்படமாக இருக்கும். இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்தது. முதல் பாதி மெதுவா ஆரம்பித்து, கடைசியில் கிளைமாக்ஸ் காட்சி அதிரடியாக இருந்தது. வங்கியில் லோன் வாங்குபவர்கள் நல்ல யோசித்து வாங்குகள் என்று ஒரு அட்வைசை கொடுத்து இருக்கிறார்கள். அது நல்லமுறையில் மக்களிடம் சென்று சேர்ந்து இருக்கு என்றார்.

மக்கள் நாயகன் இட்ஸ் கம்பேக்: படம் பார்த்த மற்றொரு ரசிகை, நல்ல திரைப்படம், இத்தனை ஆண்டுகள் கழித்து ராமராஜன் ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார். படத்தின் கதையோடு சேர்ந்து நம்மையும் கதைக்குள் இழுத்து சென்றார் ராமராஜன் என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்ல மெசேசை படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அளவுக்கு மீறி லோன் வாக்குவதால் ஏற்படும் பாதிப்பை இயக்குநர் நன்றாக சொல்லி இருக்கிறார். நிச்சயமா அனைவரும் குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்கலாம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X