Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கமல் டிஸ்சார்ஜ் குறித்த வதந்திகள்… மக்கள் நீதி மய்யம் விளக்கம்
சென்னை : நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மூன்றாவது புரமோவிலும் பிரியங்கா தான்.. மூச்சை புடிச்சு கத்தி இந்த சீசனையே நடத்துறாரு!
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக கூறப்படும் வதந்திகளுக்கு மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு பிசினசை துவக்குவதற்காக அவர் சென்றிருந்த நிலையில் கடந்த வாரத்தில் அவர் நாடு திரும்பினார்.

கொரோனா பாதிப்பு
சென்னை திரும்பியவுடன் அவர் தன்னை பரிசோதித்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தினார்.

மருத்துவமனையில் சிகிச்சை
அவர் தற்போது ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரஜினிகாந்த்தும் கமலிடம் தொலைபேசி மூலம் பேசி அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல்
இந்நிலையில் கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மை இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் விளக்கம்
சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிவரும் புகைப்படம் பழைய புகைப்படம் என்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தள்ளிப் போகும் சூட்டிங்
நடிகர் கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் ரம்யா கிருஷ்ணன் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.