twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹேப்பி பர்த் டே மக்கள் செல்வன்... நிராகரித்தவர்கள் முன் விஸ்வரூபம் எடுத்த விஜய் சேதுபதி

    |

    சென்னை : தமிழ் திரையுலகினரால் மக்கள் செல்வன் என புகழப்படும் விஜய் சேதுபதி இன்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதி தற்போது பான் இந்திய நடிகர் ஆகி விட்டதால் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    ஓராண்டை கடந்த மாஸ்டர் படம்... வீடியோ ஷேர் செய்த வில்லன்

    தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் படங்கள், வெப்சீரிஸ் என பலவற்றிலும் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல், கெஸ்ட் ரோல் என பலவற்றிலும் நடித்து தேசிய விருது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவரை பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

    நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி

    நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி

    ராஜபாளையத்தில் பிறந்த விஜய் சேதுபதி, பள்ளி படிக்கும் போதே நடிப்பில் ஆர்வம் காட்டினார். கமல் நடித்த நம்மவர் படத்தின் போதே ஆடிசன் சென்றார். ஆனால் உயரம் போதவில்லை என கூறி அப்போது அவரை நிராகரித்து விட்டார்கள். பிறகு தனது செலவிற்காக பல வேலைகளை செய்ய துவங்கினார் விஜய் சேதுபதி. சேல்ஸ்மேன், கேசியர், ஃபாஸ்ட் ஃபுட் பார்ட்னர் என பல வேலைகள் செய்தார். பிறகு கூடுதல் சம்பளத்திற்காக துபாய் சென்று அக்கவுண்டன்ட் ஆக வேலை பார்த்தார்.

    இது தான் முதல் படம்

    இது தான் முதல் படம்

    இருந்தாலும் நடிப்பு மீதான தீராத காதலால் மீண்டும் சென்னை வந்து விஜய் சேதுபதி ரெடிமேட் கிட்சன் நிறுவனத்தில் மார்க்கெட் வேலை செய்து கொண்டே பாலுமகேந்திராவின் கூத்து பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றார். கோகுலத்தில் சீதை படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகரானார். பிறகு பல படங்களில் சிறிய ரோல்களில் வந்து போனார்.

    மறதியால் மனதில் நின்றவர்

    மறதியால் மனதில் நின்றவர்

    சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோ ஆன விஜய் சேதுபதி, அடுத்த படமான சுந்தரபாண்டியனில் வில்லன் ரோலில் நடித்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. பழைய நினைவுகளை இழந்த இளைஞர் கேரக்டரில் நடித்து அனைவரின் மனதிலும் அழுத்தமாக இடம்பிடித்தார். அதற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகராகி, பல படங்களில் லீட் ரோலில் நடிக்க துவங்கினார்.

    நிஜ வாழ்க்கை ஹீரோ

    நிஜ வாழ்க்கை ஹீரோ

    நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துள்ள விஜய் சேதுபதி தற்போது 50 க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார். ஒரே சமயத்தில் பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தியேட்டர், ஓடிடி என ஒரே சமயத்தில் இவரது படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் பல சமூக சேவைகள் செய்து நிஜ ஹீரோவாகவும் பலரின் மனங்களில் உயர்ந்து நிற்கிறார் விஜய் சேதுபதி.

    விஜய்சேதுபதி சொத்து மதிப்பு

    விஜய்சேதுபதி சொத்து மதிப்பு

    விஜய் சேதுபதி தற்போது ஒரு படத்திற்கு ரூ.8 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.80 கோடி. இவரது மகனையும் சில படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் விஜய் சேதுபதி. இன்று பிறந்தநாள் காணும் விஜய் சேதுபதியை நாமும் வாழ்த்தலாம்.

    English summary
    Makkal selvan Vijay sethupathi celebrate his 43rd birthday today. Fans and celebrities are sharing their wishes through social media. Here are some interesting things about vijay sethupathi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X