மக்கள் செல்வனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. கொண்டாடி வரும் ரசிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி.
தாமதமாக வாய்ப்பு கிடைத்தாலும் அதை தவற விடாமல் மக்களை மகிழ்வித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
இன்று 43வது பிறந்தநாளை கொண்டாடும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் சேதுபதி - தி இன்ஸ்பிரேஷன்
வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த விஜய் சேதுபதி தென் மேற்கு பருவகாற்றில் அறிமுகமாகி பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களின் மூலம் ரசிகர்களை கவர ஆரம்பித்தார். பின்னர் குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்து வெற்றியும் பெற்று இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.

எதார்த்தமான நடிப்பு
25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ஆரஞ்சு மிட்டாய், விக்ரம் வேதா, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பால் அசத்தி இருப்பார். தன்னுடைய இமேஜை பற்றி கவலை படாமல் எந்த விதமான கதாபாத்திரத்திலும் நடிக்க கூடியவர் மகா நடிகர் விஜய்சேதுபதி.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்த ஆண்டில் விஜய் சேதுபதியின் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், இடம் பொருள் ஏவல், முகிழ் போன்ற தமிழ் படங்கள் வெளிவரவுள்ளன இது போக பாலிவுட் & டோலிவுட்டில் சில படங்களும், சில வெப் சீரியஸ்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.

படக்குழு வாழ்த்து
விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் படக்குழு டீரைலர் குறித்த அறிவிப்புடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது மற்றும் காந்தி டாக்ஸ் என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











