Vijay sethupathi: மக்கள் செல்வனா இது.. மெல்லிய மீசை..கண்ணாடி.. வியந்து பார்த்த பேன்ஸ்!
சென்னை: நடிப்பு மன்னன் விஜய்சேதுபதியின் புது கெட்டப் போட்டோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
2004ம் ஆண்டில் இருந்தே சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய்சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகு சுந்தர பாண்டியன் படத்தில் வில்லனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி: இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோரின் இயக்கத்தில் உருவான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களில் நல்ல வரவேற்பை அடுத்து நானும் ரவுடிதான், சேதுபதி, விக்ரம் வேதா, தர்மதுரை, கவண், 96, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெயர் எடுத்த விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய், முகில் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார்.
நெகடிவ் ரோலில்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பெயர் எடுத்தார். வில்லனாக பெயர் எடுத்த விஜய்சேதுபதி தொடர்ந்து நெகடிவ் ரோலில் மாஸ் காட்டி வருகிறார். அண்மையில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில், இவரின் வில்லத்தனத்தை பாலிவுட்டே கொண்டாடி வருகிறது.

விஜய்சேதுபதி புது கெட்டப்: இந்நிலையில், இயக்குனர் அமீர் சென்னை மைலாப்பூரில் "The Law Cafe" உணவகத்தை புதிதாக தொடங்கி உள்ளார். இதன் திறப்பு விழாவிற்கு வந்த விஜய் சேதுபதி, ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். மெல்லிய மீசையோடு, கண்ணாடி போட்டுக்கொண்டு வித்யாசமான கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
ஆளே மாறிட்டியே மாப்ளே: அவரது குண்டான உடல்வாகுவே பலருக்கும் பிடித்தமானது என்றாலும், உடலை குறைத்தால் பழைய விஜய் சேதுபதியை பார்க்க இயலும் என விரும்பக்கூடிய பல ரசிகர்கள் வியந்துப் பார்த்து ஆளே மாறிட்டியே மாப்ளே என்று கமெண்ட்டுகளை ஷேர் செய்து வருகின்றனர். விஜய்சேதுபதி தற்போது மகாராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











