விஜய் சேதுபதி வெளியிட்ட லாகின் படத்தின் டீசர்... சிறப்பான வெளியீடு
சென்னை : ப்ரவீன் மற்றும் வினோத் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லாகின்.
தொழில்நுட்பம் நமது வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தால் என்ன விளைவு நிகழும் என்பதை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி டீசரை வெளியிட்டுள்ளார்.

லாகின் படம்
அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீன், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷன் லீட் கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள படம் லாகின். ப்ரீத்தி படத்தின் நாயகியாகியுள்ளார். விபின் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜேஷ வீரமணி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ராம் கிஷன் கதை எழுதியுள்ளார்.

தொழில்நுட்ப விளையாட்டு
ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இரு நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்களது வாழ்க்கையில் விளையாடினால் என்னவாகும் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பான திரைக்கதை
லாகின் செய்து தெரியாத மற்றும் தவறான விஷயங்களை செய்தால் என்னவாகும் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்தப் படம் விவரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் பாடிய பாடல்
சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் நோ மட்டும் சொல்லாத என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடியிருந்தார். படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டீசர் வெளியீடு
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டு படத்தின் வெற்றிக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். டீசர் மிரட்டலான வகையில் அமைந்துள்ளது. பிரவீன் மற்றும் வினோத் இருவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜேஎப்எல் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகர்களாக நடித்துள்ள இருவரும் படத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். டீசரின் காட்சியமைப்புகள் சிறப்பாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த டீசர் மற்றும் படத்தின் டைட்டில் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











