அப்பா மகள் பாசத்தால் கண்கலங்க வைக்கும் சித் ஸ்ரீராம்; விஜய்சேதுபதி 50வது படத்தின் முதல் பாடல் ரிலீஸ்

By Staff

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் எல்லோராலும் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய் சேதுபதி பெயர் டாப் லிஸ்ட்டில் இருக்கும். சினிமாவில் நடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து, சைடு கேரக்ட்டர்களில் நடித்து, கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் தனக்கு கிடைத்த நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருந்த விஜய் சேதுபதியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது.

விஜய் சேதுபதி 50

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை நாயகன் எனும் அடைமொழிக்குச் சொந்தக்காரராக வலம் வந்தவர் விஜய் சேதுபதி. கதாநாயகன் மட்டும் இல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள், கௌரவ வேடங்கள் என தொட்ட இடத்தில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்து வந்தார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இந்தி சினிமா பக்கம் எட்டிப் பார்த்துள்ள விஜய் சேதுபதி அங்கும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகின்றார். இந்நிலையில் இவரது 50வது படமான மகாராஜா திரைப்படம் எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்பை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது

Vijay Sethupathi Bharathiraja Vairamuthu Maharaja Movie

குரங்கு பொம்மை இயக்குநர்

மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். குரங்கு பொம்மை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால் மாகாராஜா படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. மகாராஜா படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாரதிராஜா ஏற்கனவே குரங்கு பொம்பை படத்தில் நடித்து தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஜா ரிலீஸ் தேதி

கடந்த ஆண்டு துவக்கத்தில் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். கையில் ரத்தக்கறையுடன் உள்ள அரிவாளுடன் சலூன் நாற்காலியில் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் படியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அஜனீஷ் பி. லோகநாதன் இசையமைக்க இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளா பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் வரும் 14ஆம் தேதி முதல் ரிலீசாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதற்கு முன்னர் வெளியான படத்தின் ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Vijay Sethupathi Bharathiraja Vairamuthu Maharaja Movie

ரிலீஸான முதல் பாடல்

படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போதே படம் ஒரு சாதாரண குடும்பத்தலைவனின் கதையாகத்தான் இருக்கும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் படத்தின் புரோமோசனுக்காக சில தினங்களுக்கு முன்னர் மகாராஜா படக்குழு துபாயில் உள்ள புருஜ்கலிஃபாவிற்குச் சென்று அங்கு படத்தின் ட்ரைலரை ஒளிபரப்பினர். இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதம் 8ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக தாயே தாயே எனும் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அப்பா மகள் பாசத்தை வெளிக்காட்டும் பாடலாக இது அமைந்திருப்பதால் பாடல் பல பெண் ரசிகைகளைக் கவர்ந்துள்ளது. பாடலை வைரமுத்து எழுத சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். மகாராஜா படத்திற்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்த பாடல் மொத்தம் 3.38 நிமிடங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

சாதிப்பாரா விஜய் சேதுபதி?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலான முன்னணி கதாநாயகர்களின் 25வது, 50வது, 100வது படங்கள் வெற்றிகரமான படமாக அமைந்ததில்லை. குறிப்பாக விஜயின் 50வது படமான சுறா சுமாரான படமாகவே அமைந்தது. ஆனால் அஜித்தின் 50வது படம் மங்காத்தா மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சமீபத்தில் வெளியான நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் வெற்றியை எட்டவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதியின் படம் எந்த லிஸ்ட்டில் இணையப்போகின்றது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X