‘மக்கள் செல்வி’னா இவங்க மட்டும்தான்.. திரும்பவும் போஸ்டர் மூலம் உறுதி செய்த வாரிசு நடிகை படக்குழு!
மக்கள் செல்வி பட்டம் வரலட்சுமிக்கு தான் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது டேனி படக்குழு.
சென்னை: மக்கள் செல்வி பட்டம் நடிகை வரலட்சுமிக்கு தான் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது டேனி படக்குழு.
புரட்சி தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, புரட்சி தளபதி, புரட்சி கலைஞர், மக்கள் செல்வன், நவரச நாயகன் உள்பட தமிழ் சினிமா நடிகர்களின் பெயருக்கு முன்னாள் இருக்கும் பட்டங்கள் பல. இவை அனைத்தும் அவர்களது ரசிகர்களின் அன்பால் கிடைத்தது.
நடிகைகளை பொறுத்த வரையில் ஒரு சிலருக்கு மட்டுமே அதுபோல் பட்டங்கள் கிடைத்துள்ளன. புன்னகை அரசி கே.ஆர்,விஜயாவில் தொடங்கி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரையில், அடைமொழி கொண்ட நடிகைகளின் பெயர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

மக்கள் செல்வி
இந்த வரிசையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு மக்கள் செல்வி எனும் பட்டத்தை வழங்கியது டேனி படக்குழு. ஆனால் அந்த தலைப்பு கீர்த்தி சுரேஷுக்கானது என சிலர் கிளம்பியதால் மோதல் வெடித்தது. இதனால் அந்த பட்டம் யாருக்கு சொந்தமானது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

செகண்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில் டேனி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரிலும் 'மக்கள் செல்வி' வரலட்சுமி சரத்குமார் என குறிப்பிட்டு, அவருக்குத்தான் அந்த பட்டம் என்பதை உறுதி செய்துள்ளது படக்குழு. இதனால் வரலட்சுமி ரசிகர்கள் ஹேப்பி மூடில் டிவீட்டி வருகிறார்கள்.

வாழ்த்து
'டேனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே, ஐந்து வித்தியாசமான போஸ்டர்களில் வெளிவந்து, தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தது. தற்போது 'டேனி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறார்.
பெருமிதம்
வரலட்சுமியும் தனது டிவிட்டர் பக்கத்தில் டேனி போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அவரது தந்தை சரத்குமார், மகளுக்கு வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்துள்ளார். அதில், "எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். உன்னை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன்.

மகிழ்ச்சி
உனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக்கொள்ள நீ மேற்கொள்ளும் முயற்சிகள் நட்சத்திர அந்தஸ்த்துக்கும் மேலானது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்", என அவர் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் வாழ்த்தை பார்த்து பூரித்துபோன வரு, 'தாங்க் யூ டாடி' என மகிழ்ச்சியுடன் ரிப்ளை செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











