twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’மாஸ்டர்’ மக்கள் செல்வனுக்கு ஹேப்பி பர்த்டே.. குமுதா மட்டுமல்ல டோட்டல் தமிழ்நாடே ஹேப்பி அண்ணாச்சி!

    |

    சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 42வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகனாக இருந்தாலும், விடா முயற்சி செய்தால் சூப்பர்ஸ்டாருக்கே பிடித்த மகா நடிகனாக மாறலாம் என கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விஜய்சேதுபதி.

    வார வாரம் தனது புதுப்படங்களை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த சூப்பர் டீலக்ஸ். 24 மணி நேரமும் கால்ஷீட் கொடுத்து ஓய்வின்றி நடிக்கிறீங்களா என பலரும் வியந்து பாராட்டும் அளவிற்கு சினிமா மீது தீரா காதல் கொண்ட மாமனிதன் விஜய்சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

     அசுரன் விழாவில் 'குருவி' பேச்சு... விளாசியத் தள்ளிய ரசிகர்கள்... விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட பவன் அசுரன் விழாவில் 'குருவி' பேச்சு... விளாசியத் தள்ளிய ரசிகர்கள்... விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட பவன்

    ‘மாஸ்டர்’ மான்ஸ்டர்

    கடந்த ஆண்டு ரிலீசான பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாக மிரட்டிய விஜய்சேதுபதி, வரும் சம்மரில் மாஸ்டரில் தளபதி விஜய்யுடன் மோதும் மான்ஸ்டராக நடித்து வருகிறார். நேற்று மாஸ்டர் செகண்ட் லுக்கிலும் தளபதி தரிசனம் கிடைத்த நிலையில், இன்று விஜய்சேதுபதி லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    துக்ளக் தர்பார்

    டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், காயத்ரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் துக்ளக் தர்பார். துக்ளக் தர்பார் படக்குழு சார்பில் விஜய்சேதுபதியின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

    மகா நடிகன்

    மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் மாஸ் என்ட்ரி காட்சிகளை மாஷ்-அப் செய்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #HappyBirthdayVijaySethupathi, #HBDVijaySethupathi என ஹாஷ்டேக்குகளையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    தமிழ் சினிமாவின் பெருமை

    கடந்த பத்து ஆண்டுகளில் கிராமத்து இளைஞராகவும், பீட்ஸா பாயாகவும், குமுதாவின் குமரனாகவும், கடத்தல் குருவாகவும், சேதுபதி ஐபிஎஸ் ஆகவும், டுபாகூர் ரவுடியாகவும், ஜானுவின் ராமாகவும், பேட்ட வில்லனாகவும், சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவாகவும் கலக்கி தமிழ் சினிமாவின் பெருமையாக விஜய்சேதுபதி மாறியுள்ளார்.

    சிம்பிள் தான் கெத்து

    பெரிய நடிகராக ஆகிட்டீங்க, ஏன் இப்படி சாதாரணமா இருக்கீங்க என நீயா நானாவில் கேட்டபோது, நான் சிம்பிளா கெத்தாத்தான் இருக்கேன் என விஜய்சேதுபதி சொல்லும் அழகே தனி தான்.

    ஷாருக்கான் பாராட்டு

    சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விருது வாங்க சென்றிருந்த விஜய்சேதுபதியை பார்த்த பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், நான் என் வாழ்வில் பார்த்த நடிகர்களிலே நீங்கள் தான் சிறந்த நடிகர் என பாராட்டிய வாவ் வீடியோ கிளிப்பும் வைரலாகி வருகிறது.

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேதுனா

    ரசிகர்களை அருகில் அழைத்து பேசுவது மட்டுமின்றி அவர்களுக்கு முத்தம் கொடுத்து உச்சி குளிர செய்யும் அன்பான நடிகர் விஜய்சேதுபதியை அவரது ரசிகர்கள் அன்புடன் சேதுனா என்றே அழைத்து வருகின்றனர்.

    2020ல்

    2020ம் ஆண்டு விஜய்சேதுபதிக்கு சூப்பர் ஆண்டாக அமையப்போகிறது. அவர் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் இந்த ஆண்டும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், துக்ளக் தர்பார், மாஸ்டர், லாபம் இன்னும் சில படங்களும் லைனில் இருக்கின்றன.

    English summary
    Makkal Selvan Vijay Sethupathi celebrate his 42nd birthday today. Thalapathy fans and Vijay Sethupathi fans create hashtags and trending in twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X