பாலிவுட்டில் மீண்டும் ஒரு பெரிய பார்ட்டி.. காதலருடன் கலந்து கொண்ட பிரபல நடிகை #MalaikaArora
மும்பை: ஏற்கனவே கரண் ஜோஹர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டி புகைப்படங்கள் வைரலாகி போதைப் பொருள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரம்மாண்ட பாலிவுட் பார்ட்டி அரங்கேறி உள்ளது.
இந்த பார்ட்டியில் காதலருடன் கலந்து கொண்ட பிரபல நடிகை மலைகா அரோராவின் ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
பாலிவுட் பிரபலம் அம்ரிதா அரோராவின் வீட்டில் இந்த பார்ட்டி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நெபோடிச சர்ச்சை
இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், பாலிவுட்டில் பிரபலங்களின் வாரிசுகளை சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் என்றும், பாலிவுட்டில் அவர் பெரிய நெபோடிச கேங்கை உருவாக்கி வருகிறார் என்றும் ஏகப்பட்ட புகார்கள், விவாதங்கள், எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

சுஷாந்த் சிங் மரணம்
கடந்த ஆண்டு பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், பாலிவுட்டில் நிலவும் நெபோடிசம் காரணமாகத்தான் என்றும், சுஷாந்தின் ரசிகர்கள் கொந்தளித்தனர். மேலும், சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்றும் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு விசாரணை வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர்.

போதைப் பொருள் புழக்கம்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை தொடர்ந்து பாலிவுட்டில் நிலவி வரும் போதைப் பொருள் தொடர்பான விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது. ஏகப்பட்ட பிரபல நடிகர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது. அப்போது கரண் ஜோஹர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டியின் புகைப்படங்கள் வைரலாகி அந்த பார்ட்டியில் போதைப் பொருள் வழங்கப்பட்டதா? என்கிற விசாரணையும் நடத்தப்பட்டது.

மீண்டும் ஒரு பார்ட்டி
அந்த விசாரணை முடிவுகளே இன்னும் தெளிவாகாத நிலையில், தற்போது பாலிவுட்டில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட பார்ட்டி நடத்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் பிரபலம் அம்ரிதா ஆரோராவின் வீட்டில் நடைபெற்ற இந்த பார்ட்டியில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

காதலருடன்
இந்த பார்ட்டியில் விலையுயர்ந்த சிகப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு காதலர் அர்ஜுன் கபூருடன் பாலிவுட் நடிகை மலைகா அரோரா கலந்து கொண்டார். மேலும், பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூர், மாஹேப் கபூர், கெளரி கான், சீமா கான், மனீஷ் மல்கோத்ரா, நடாஷா பூனாவாலா உள்ளிட்ட பலரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

ஹாஷ்டேக் டிரெண்டிங்
இந்த பார்ட்டியின் ஷோ ஸ்டாப்பராக மலைகா அரோரா பலரையும் ஈர்த்துள்ளார். #MalaikaArora என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மலைகா அரோராவை வர்ணித்தும், பார்ட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்களை கழுவி ஊற்றியும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











