Don't Miss!
- News
வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முடிவுக்கு வந்த மலைக்கா -அர்ஜூன் கபூர் உறவு... சோகத்தில் மலைக்கா?
மும்பை : கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்த மலைக்கா அரோரா -அர்ஜூன் கபூர் உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையில் 13 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாகவே கூறப்பட்டு வந்தது.
விஜய்சேதுபதியின்
ஸ்டேஷன்ல
ஷிவானி
தான்
லேடி
போலீஸா?
இயக்குநர்
பொன்ராம்
உடன்
ஒரு
கூல்
போட்டோ!

நடிகை மலைக்கா அரோரா
உயிரே படத்தில் இடம்பெற்ற ரயில் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ரயிலின் மேலே நின்று மலைக்கா அரோரோ போட்ட ஆட்டமும் மிகவும் பிரபலமானது. ஷாருக்கின் எவர்கிரீன் பாடல்களில் இதுவும் ஒன்று. இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்திருந்தார்.

வெளிப்படையான அறிவிப்பு
நடிகை மலைக்கா அரோரா மற்றும் அர்ஜூன் கபூர் இடையில் ரிலேஷன்ஷிப் காணப்படுவதாக வதந்திகள் பரவின. இதுகுறித்து இவர்கள் இருவரும் மௌனம் சாதித்த நிலையில் கடந்த 2019ல் தங்களது உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக தெரிவித்தனர்.

முன்னாள் கணவரை பிரிந்த மலைக்கா
இவர்கள் இருவருடைய உறவு காரணமாகவே மலைக்கா தனது முன்னாள் கணவரை பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அர்ஜூன் கபூருடன் மலைக்கா தன்னுடைய மகனுடன் சேர்ந்து டேட்டிங்கில் இருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரின் 4 வருட உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தனிமைப்படுத்திக் கொண்ட மலைக்கா
இதையடுத்து கடந்த 6 நாட்களாக தனது வீட்டை விட்டு வெளியில் வராமல் வெளியுலக தொடர்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார் மலைக்கா. இதேபோல அர்ஜூன் கபூரும் வெளியில் எங்கும் செல்லவில்லை என்றாலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலைக்காவின் வீட்டிற்கு அருகில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு இரவு உணவிற்காக சென்றுள்ளார்.

சோகமான மனநிலையில் மலைக்கா
ஆனால் அருகில் இருக்கும் மலைக்காவின் வீட்டிற்கு அவர் செல்லவில்லை. ஆயினும் இவர்களது பிரிவு குறித்து இதுவரை இருவரும் வாய் திறக்கவில்லை. மாறாக மலைக்கா தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் மிகவும் சோகமான மனநிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வித்தியாசம்
அர்ஜூனின் வயது 36, மலைக்காவின் வயது 48. இவர்கள் இருவரின் உறவு குறித்தும் வயது வித்தியாசம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோது, அதுகுறித்து அர்ஜூன் கபூர், இவ்வாறு விமர்சனங்கள் செய்பவர்கள்தான் தன்னுடைய புகைப்படம் எடுத்துக் கொள்ள அலை மோதுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

விமர்சனங்களை ஏற்படுத்திய பிரிவு
இந்நிலையில் தற்போது இவர்களின் பிரிவு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வயது வித்தியாசம் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. முன்னதாக இவர்களின் பிரிவு குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக மாலத்தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இந்த ஜோடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.