செல்ஃபி எடுக்க சுற்றி வளைத்த ரசிகர்கள்: ஓட்டம் பிடித்த நடிகை
மும்பை: செல்ஃபி எடுக்க ரசிகர்கள் சுற்றி வளைத்ததால் நடிகை மலாய்கா அரோரா ஓட்டம் பிடித்தார்.
பிரபல பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா தனது தந்தையுடன் வெளியே சென்றிருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க சுற்றி வளைத்தனர். அனுமதி இன்றி ரசிகர்கள் செல்ஃபி எடுக்கத் துவங்கினர்.

ரசிகர்கள் நெருங்கி வந்து செல்ஃபி எடுத்ததை பார்த்த மலாய்கா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்களிடம் இருந்து தப்பி சென்று காரில் ஏறினார். அவர் ரசிகர்களிடம் இருந்து தப்பிச் சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் சுற்றி வளைத்ததை பார்த்த மலாய்காவின் தந்தை வந்து அவர்களை விலகிச் செல்லுமாறு கூறினார். நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானிடம் இருந்து விவாகரத்து பெற்ற மலாய்கா தற்போது நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்.
அவர்கள் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக உள்ள மலாய்கா பாலிவுட் படங்களில் குத்துப்பாட்டு டான்ஸ் ஆடி வருகிறார்.
குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாலும் தன்னை யாராவது ஐட்டம் கேர்ள் என்று கூறினால் அறைந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் அவர். பாலிவுட்டில் குத்துப்பாடலை ஐட்டம் டான்ஸ் என்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











