கல்யாணத்துக்கு முன்னாடியே காதலும் கட்டிப்பிடியும்.. மயிலு மருமகளின் பர்த்டே கிஃப்ட்ட பாருங்க!
மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூரின் காதலியான மலைக்கா அரோரா தனது நாத்தனாரின் பிறந்தநாளுக்கு அசத்தலான கிஃப்ட்டை கொடுத்துள்ளார்.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மலைக்கா அரோரா, இயக்குநர் மணிரத்தினத்தின் 'உயிரே' படத்தில் இடம்பெற்ற 'தக்க தைய்ய தைய்யா' பாடலில் நடனமாடியவர்.
இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயதுடைய மகன் இருக்கிறார்.

மலைக்காவின் மகன்
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மலைக்கா அரோரா தனது கணவரை சட்டப்படி விவாகரத்து செய்தார். மலைக்காவின் மகன் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

விரைவில் திருமணம்
தற்போது 46 வயதான மலைக்கா அரோராவும், போனி கபூரின் 33 வயது மகனான அர்ஜூன் கபூரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

நாய்க்குட்டியுடன் போட்டோ
இந்நிலையில் அர்ஜூன் கபூரின் சகோதரி, அன்ஷுலா கபூர் நேற்று பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அன்ஷுலா நாய்க்குட்டியுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த மலைக்கா அரோரா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காக்கா பிடிக்கிறார்
மேலும் லவ் அன்ட் ஹக்ஸ் என்றும் தெரிவித்திருக்கிறார் மலைக்கா. மலைக்காவின் வாழ்த்தை பார்த்த நெட்டிசன்கள் திருமணத்திற்கு முன்பே நாத்தனாருக்கு கட்டிப்பிடியும் காதலையும் கொடுத்து காக்கா பிடிக்கிறார் என கமென்ட் அடித்து வருகின்றனர்.

இப்போதைக்கு இல்லை
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணம் குறித்த அனுமானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது இருவரும் பிஸ்னஸில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார் மலைக்கா அரோரா.


Click it and Unblock the Notifications











