கொரோனா பாதிப்பு.. பிரபல நடிகை வசிக்கும் அபார்ட்மென்ட்டுக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

By

சென்னை: கொரோனா காரணமாக பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Recommended Video

Hot Red Carpet Actress : உள்ளாடை இல்லாமல் விழாவை கலக்கிய ரகுல் | Vogue Beauty Awards 2019

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இருந்தும் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமான உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

தனிமைப்படுத்துதல்

தனிமைப்படுத்துதல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை, அதிகாரிகள் தனிமைப்படுத்தி வருகின்றனர். நோய் தொற்று பரவாமல் தடுக்க, இதை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொற்று காரணமாக பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலைகா அரோரா

மலைகா அரோரா

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ், இந்தியில் வெளியான 'உயிரே' (தில்சே) படத்தில் தைய தைய தைய தையா என்ற பாடலுக்கு ஆடியவர், நடிகை மலைகா அரோரா. இந்தியில் கண்டே, எமி உள்ளிட்ட சில படங்களில், கேரக்டர் ரோலில் நடித்துள்ள இவர், பல்வேறு படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். தெலுங்கு படங்களிலும் ஆடியுள்ளார்.

அர்பாஸ் கான்

அர்பாஸ் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட மலைகா, அவருடன் இணைந்து படங்களை தயாரித்து வந்தார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

பின்னர் விவாகரத்து செய்தனர். தனியாக வசித்து வந்த நடிகை மலைகா அரோராவும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூரும் காதலித்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை மலைக்காவுக்கு வயது, 47. அர்ஜூன் கபூருக்கு வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது.

அடுக்குமாடி குடியிருப்பு

அடுக்குமாடி குடியிருப்பு

நடிகை மலைகா மும்பை பாந்த்ரா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மகன் அர்ஹானுடன் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் இடம் கொரோனா கன்டைன்மென்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவரது குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கொரொனா பாதிப்பு

கொரொனா பாதிப்பு

இதை நடிகை மலைகா அரோரா தெரிவிக்கவில்லை என்றாலும் மும்பையில் உள்ள சில மீடியா, இதை உறுதி செய்துள்ளது. கொரொனா பாதிப்பு, மகாராஷ்ட்ராவில் 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மும்பையிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இத்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X