Don't Miss!
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Lifestyle
வாழைப்பூ கட்லெட்
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பெத்த மகனை கட்டிப்பிடிக்க முடியலையே.. கொரோனா வைரஸ் பாதித்த பிரபல நடிகை வேதனை!
மும்பை: கொரோனா பாதித்துள்ளதால் மகனை கட்டிப்பிடிக்க கூட முடியவில்லையே என்று கூறியுள்ளார், பிரபல நடிகை ஒருவர்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் பீதியில் உள்ளன.
இந்த உயிர்கொள்ளி வைரஸ் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கொரோனா
மருத்துவமனையில்
பிரபல
நடிகர்
திடீர்
மரணம்..
திரையுலகம்
அதிர்ச்சி..
பிரபலங்கள்
இரங்கல்!

ஐஸ்வர்யா ராய்
இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா, ஷர்மிளா மந்த்ரே உள்பட பலருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது.

அர்ஜூன் கபூர்
இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜூன் கபூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்த அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்து இருந்தார்.

மலைகா அரோரா
இந்தி நடிகை மலைகா அரோராவும் அர்ஜுன் கபூரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மலைகா அரோராவுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எல்லைகள் இல்லை
இந்நிலையில் கொரோனா பாதித்துள்ளதால் மகனை கட்டிப்பிடிக்க கூட முடியவில்லையே என்று வருத்தமாகக் கூறியுள்ளார், நடிகை மலைகா அரோரா. இன்ஸ்டாகிராமில் தன் மகன் அர்ஹான் மற்றும் செல்ல நாய்க்குட்டியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சுவற்றுக்கு மறுபக்கம் நின்று அவர்கள் எட்டிப் பார்க்கின்றனர். அதில் கேப்ஷனாக அவர் கூறியிருப்பதாவது:

தனிமைப்படுத்தல்
சமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்தல் காரணமாக, நாங்கள் பேசிக்கொள்ளவும் பார்த்துக்கொள்ளவும் ஒரு வழியை கண்டுள்ளோம். இன்னும் சில நாட்கள், என் குழந்தைகளை என்னால் கட்டித் தழுவ முடியாது. இதனால் என்னிதயம் உடையும்போது, அவர்களின் இனிமையான முகங்களை பார்ப்பது எனக்கு உற்சாகத்தையும் சக்தியையும் தருகிறது என்று கூறியுள்ளார்.

பிபாஷா பாசு
இதற்கு பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை பிபாஷா பாசு, 'நீங்கள் ஏற்கனவே வலிமையானவர். விரைவிலேயே உங்கள் குழந்தைகளை அணைப்பீர்கள் என்று கூறியுள்ளார். அமிர்தா அரோரா, தியா மிர்ஷா, ஷோபி சவுத்ரி, ட்விங்கிள் கண்ணா உள்பட பலர் தங்கள் கமென்ட்களை தெரிவித்துள்ளனர்.

அர்பாஸ் கான்
நடிகை மலைகா, மணிரத்னத்தின் உயிரே இடம்பெற்ற, தைய தைய தையா பாடலுக்கு ஆடியவர். இவர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார்.