நான் நிக்கர் போடும் ஆன்ட்டியா?: பிகினி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவின் பிகினி புகைப்படம் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுக்கு 45 வயதாகிறது. ஆனால் அவரை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. தினமும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, தியானம், யோகா செய்வதுமாக உள்ளார்.
உடலை சிக்கென்று வைத்திருக்கும் மலாய்கா குட்டி, குட்டியாக உடை அணிவதை பார்த்து சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்கிறார்கள்.
பிகினி
மலாய்கா அரோரா அண்மையில் ஜிம்மிற்கு அணிந்து சென்ற உடையை பார்த்த நெட்டிசன்கள் ஆன்ட்டிக்கு இன்னும் 18 வயது என்று நினைப்பு, நிக்கர் அணிந்திருக்கிறார் என்று கூறி கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் மலாய்காவின் பிகினி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மலாய்கா
மலாய்கா தனது தோழிகளுடன் சேர்ந்து மாலத்தீவுகளுக்கு சென்று ஓய்வு எடுத்தார். அங்கு அவர் பிகினி அணிந்து கடலில் குளித்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை பார்த்த ரசிகர்களோ, வாவ், வவ்வாவ் என்று அவரின் அழகை புகழ்ந்து கமெண்ட் போட்டுள்ளனர். மற்றவர்கள் வழக்கம் போன்று மலாய்காவை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.
நேரம்
ஆன்ட்டிக்கு பிகினி தேவையா?, 17 வயது மகனை வைத்துக் கொண்டு இவர் போடும் ஆட்டம் இருக்கே. இந்த புகைப்படத்தை மகனும் பார்ப்பார் என்று மலாய்காவுக்கு தோன்றவில்லையா?. நல்ல அம்மா என்று நெட்டிசன்கள் மலாய்காவை விளாசியுள்ளனர். தனது பிகினி புகைப்படங்களை பார்த்து கலாய்ப்பார்கள் என்பது தெரிந்தும் தான் மலாய்கா அரோரா இப்படி செய்துள்ளார். அடுத்தவர்களுக்காக வாழ முடியாது என்கிறார் மலாய்கா.
தங்கை
மலாய்கா மாலத்தீவுகளில் கடற்கரையோரம் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த அவரின் தங்கை அம்ரிதா அரோரா சீன் பார்ட்டி என்று கலாய்த்துள்ளார். நெட்டிசன்களோ ஆன்ட்டி என்று கிண்டல் செய்துள்ளனர். கலாய்ப்பவர்கள் கலாய்த்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்று மலாய்கா அவர் வேலையை மட்டும் பார்க்கிறார். மேலும் தான் தன்னை விட வயதில் சிறியவரான நடிகர் அர்ஜுன் கபூரை காதலிப்பது குறித்து மற்றவர்கள் விமர்சிப்பதையும் அவர் காதில் வாங்குவது இல்லை. காதலுக்கு மனம் தான் முக்கியம், வயது இல்லை என்கிறார் மலாய்கா அரோரா.


Click it and Unblock the Notifications











