காதல் விவகாரத்தை மாஜி கணவரிடம் போட்டுக் கொடுத்த கார் டிரைவரை டிஸ்மிஸ் செய்த நடிகை
மும்பை: தான் தன் காதலருடன் பேசுவதை ஒட்டுக் கேட்டு அதை தன் முன்னாள் கணவரிடம் கூறிய கார் டிரைவரை பணி நீக்கம் செய்துள்ளாராம் பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா.
பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கணவரை பிரிந்த அவருக்கும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது.

மலாய்கா
மலாய்கா அர்ஜுனுடன் பேசும் விஷயம் எல்லாம் அர்பாஸ் கானுக்கு தெரிந்துள்ளது. மலாய்காவின் கார் டிரைவர் முகேஷின் சகோதரர் பப்லு தான் அர்பாஸ் கானின் கார் டிரைவர். அதனால் முகேஷ் தான் தன் காதல் விவகாரங்களை அர்பாஸிடம் கூறுவதாக மலாய்காவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கான் குடும்பம்
மலாய்கா அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறித்து சல்மான் கான் வீட்டில் பேச்சு கிளம்பியுள்ளது குறித்து அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் கார் டிரைவர் முகேஷை பணி நீக்கம் செய்துள்ளாராம்.

திருமணம்
மலாய்காவுக்கும், அர்ஜுனுக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் உண்டு என்று பாலிவுட்டில் பேச்சு இருந்தது. இந்நிலையில் மலாய்கா அர்ஜுனுடனான காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார். ஆனால் இதில் போனி கபூருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

ஜார்ஜியா
மலாய்காவை பிரிந்த அர்பாஸ் கான் ஜார்ஜியா ஆன்ட்ரியானி என்கிற பெண்ணை காதலித்து வருகிறார். அவர்களும் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











