என்னது கல்யாணமா..? அந்த ஐடியாலாம் இப்ப இல்லை.. அவசரமாக மறுத்த பிரபல நட்சத்திர தம்பதியின் மகள்!

By

சென்னை: தனது திருமணம் பற்றி வந்த வதந்தியை அவசரமாக மறுத்துள்ளார் பிரபல நட்சத்திரத் தம்பதியின் மகள்.

பிரபல மலையாள நடிகர் ஜெயராம். இவர் தமிழில் முறைமாமன், கோலங்கள், தெனாலி, பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி, உத்தமவில்லன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இப்போது மணிரத்னம் இயக்கும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

பூவுக்குள் பூகம்பம்

பூவுக்குள் பூகம்பம்

இவர் நடிகை பார்வதியை காதலித்து கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பார்வதி, மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், தியாகராஜன் இயக்கி நடித்த, பூவுக்குள் பூகம்பம் படத்தில் நடித்துள்ளார். ஜெயராம்- பார்வதி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மகன் காளிதாஸ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மாளவிகா ஜெயராம்

மாளவிகா ஜெயராம்

மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி மாளவிகா ஜெயராம். வெளிநாட்டில் படித்து வந்த இவர் மாடல் உலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இவர் கடந்த மாதம், திருமண ஷூட் என்று சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், திருமணமா? என்று கேட்டிருந்தனர். ஆனால், அது விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ என்று கூறியிருந்தார் மாளவிகா.

விளம்பர படம்

விளம்பர படம்

இதையடுத்து விளம்பர படம் ஒன்றில் தனது தந்தை ஜெயராமுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மாளவிகா, இது ஒரு முயற்சி, உங்கள் ஆதரவும் அன்பும் தேவை. என் தந்தையுடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கிய மலபார் கோல்டு நிறுவன குடும்பத்துக்கு நன்றி' என்று கூறியிருந்தார்.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

இந்நிலையில் மாளவிகா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. அதை மறுத்துள்ள மாளவிகா, 'எனக்கு இப்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை. உங்களுக்கு அப்படி ஏதும் ஐடியா இருந்தால் வேதிகாஃபேஷனை செக் செய்துகொள்ளுங்கள். கொரோனா வைரஸில் தாக்கம் குறைந்த பிறகு திருமணம் செய்துகொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: jayaram ஜெயராம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X