அவங்கள ஏன் நீக்கினீங்க.. பினராயிக்கு நெருக்கடி கொடுக்கும் கேரள நடிகைகள் #BringBackShailajaTeacher

திருவனந்தபுரம்: கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்த சைலஜா டீச்சருக்கு புதிய அமைச்சரவையில் இடம் கொடுக்காதது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

#BringBackShailajaTeacher எனும் ஹாஷ்டேக்கை கேரள மக்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மரியான் நடிகை பார்வதி, மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் பிரேமம் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன் என பலரும் சைலஜா டீச்சருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

சைலஜா டீச்சர்

சைலஜா டீச்சர்

நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் மட்டனூர் தொகுதியில் போட்டியிட்ட சைலஜா டீச்சர் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். முதல்வர் பினராயி விஜயனின் முந்தைய ஆட்சியின் போது சுகாதாரத் துறை அமைச்சராக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த பெரிதும் போராடியவர் இவர்.

அமைச்சரவையில் இடமில்லை

அமைச்சரவையில் இடமில்லை

செவ்வாயன்று வெளியிடப்பட்ட இறுதி அமைச்சரவை பட்டியலில் சைலஜா டீச்சரின் பெயர் இடம் பெறாதது ஒட்டுமொத்த கேரள மக்களுக்கும் பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கான காரணத்தை கேட்டும், மீண்டும் அவரையே சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

ஹாஷ்டேக் டிரெண்டிங்

ஹாஷ்டேக் டிரெண்டிங்

#BringBackShailajaTeacher எனும் ஹாஷ்டேக்கை போட்டு கேரள பிரபலங்களும் நெட்டிசன்களும் சைலஜா டீச்சருக்கு மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை சத்தமாக எழுப்பி வருகின்றனர்.

மாளவிகா மோகனன் கேள்வி

மாளவிகா மோகனன் கேள்வி

கொரோனா பரவலை தடுக்கும் போரில் சிறப்பான பணியாற்றி வந்த சைலஜா டீச்சருக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லாதது ஏன்? என முதல்வர் பினராயி விஜயனுக்கே நேரடியாக டேக் செய்து கேள்வி எழுப்பி உள்ளார் மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்.

அனுபமா ஆதங்கம்

அனுபமா ஆதங்கம்

#BringBackShailajaTeacher ஹாஷ்டேக்கையும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சரின் புகைப்படத்தையும் பதிவிட்டு பிரேமம், கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

பார்வதி பளிச்

பார்வதி பளிச்

தனுஷின் மரியான் படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதியும் #BringBackShailajaTeacher ஹாஷ்டேக்கை பதிவிட்டு, கேரள அமைச்சரவையில் இருக்க அனைத்து திறமைகளும் உள்ள நபர் இவர் என பதிவிட்டு தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் மெளனம்

நடிகர்கள் மெளனம்

சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் மோகன்லால், பிருத்விராஜ் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், எந்தவொரு பயமும் இன்றி மலையாள நடிகைகளான பார்வதி, அனுபமா மற்றும் மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ள ட்வீட்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X