படுக்கையறையில் மாளவிகா மோகனன்.. ரசிகர்களிடம் இப்படியொரு கேள்வி வேற.. வைரலாகும் போட்டோ!
சென்னை: மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனின் தரிசனத்துக்காக ரசிகர்கள் காத்திருந்தாலும், அந்த கவலையை மறக்கடிக்கும் விதமாக அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் மாளவிகா.
Recommended Video
அந்தாதூன், மகரிஷி, பிருத்விராஜ் நடிப்பில் ஜோர்தானில் உருவாகி வரும் ஆடு ஜீவிதம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன்.
2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.

கிளாமர் போட்டோஸ்
மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். மாடலிங்கிலும் அதிக ஆர்வம் கொண்ட மாளவிகா மோகனன் தாராளமாக கவர்ச்சி காட்டி நடிப்பதிலும் கில்லாடி தான்.

படுக்கையறையில்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி ஆசிரியையாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். ரஜினியின் பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா, கோலிவுட் ரசிகர்களை கவர இதுபோன்ற போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது படுக்கையறையில் படுத்தபடி இருக்கும் செம ஹாட் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ரசிகர்களிடம் கேள்வி
51 நாட்கள் லாக்டவுனில், தன்னை போல யாரெல்லாம் படுக்கையறையே கதியென கிடக்கிறீர்கள் கையை தூக்குங்க என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கும் பலரும், ஆமாம் என்றும் சிலர் ரொம்ப அழகா க்யூட்டா இருக்கீங்க என ஐஸ் வைத்தும், விஜய் ரசிகர்கள் "அந்த கண்ண பார்த்தாக்கா" என மாஸ்டர் பாடலை பாடியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அம்மாவுடன்
அன்னையர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தங்கள் அம்மா குறித்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டு வந்தனர். நடிகை மாளவிகா மோகனனும், தனது அம்மா பீனா மோகனனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட் புரொடக்ஷன் ஆரம்பம்
இந்தியா முழுவதும் லாக்டவுன் தளர்வு ஏற்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என்றும், ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு விரைந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரமே மாளவிகா மோகனனை நடிகர் விஜய்க்கு ஜோடியாக ரசிகர்கள் திரையில் கண்டு ரசிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











