தங்கலான் தங்கத்துக்கு பிறந்தநாள்.. மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனனின் மகளான மாளவிகா மோகனன் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை வாழ்த்தி தங்கலான் படக்குழு மாளவிகா மோகனனின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 2013ல் வெளியான பட்டம்போலே படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan celebrates her birthday today and Thangalaan team gives a super gift

மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் நடித்து வந்த இவர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மாஸ்டர் ஹீரோயினாக மனசை பறிச்சிட்டாரு: பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானாலும், அந்த படத்தில் அவர் ஹீரோயின் இல்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, "அந்த கண்ண பார்த்தாக்கா" பாடல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் மனசை பறிச்சிட்டாரு மாளவிகா மோகனன்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து குதூகலமான கண்களுக்கு விருந்து படைக்கும் போட்டோக்களை வெளியிட்டு தமிழ் சினிமாவிலும் தாராளமாக ரசிகர்களை கவர்ந்து விட்டார் இந்த மல்லு பேபி.

30 வயசு ஆகிடுச்சு: மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை. 1993ம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்த நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தங்கலான் தங்கத்தின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தங்கலான் டீம் சூப்பரான பர்த்டே ட்ரீட்டை கொடுத்துள்ளது.

தங்கலான் ஆரத்தி: தங்கலான் படத்தில் மலைவாழ் பெண்ணாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரத்துக்கு ஆரத்தி என பெயர் வைத்துள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.

தற்போது ஆங்கிலத்தில் டிசைன் செய்யப்பட்ட கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தங்கலான் படத்திற்கு தமிழில் ஏன் போஸ்டர் வெளியிடவில்லை என ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்பி உள்ளனர். எகிப்து மம்மி போல இருக்கிறார் மாளவிகா என்றும் கோலிவுட் கிளியோபாட்ரா என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X