மாளவிகா மோகனனுக்கு இத்தனை பாய் ஃபிரெண்டா.. வீட்டில் நடந்த மெகா விருந்தை பாருங்க!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நண்பர் ஐட்டம் பாம் உடன் அசத்தலாக கை போட்டு நிற்கும் மாஸ்ட பட ஹீரோயின் வீட்டில் என்ன இத்தனை அழகழகான ஆண்கள் பட்டாளமே அணிவகுத்து இருக்கிறதே என மாளவிகா மோகனனின் ரசிகர்கள் எல்லாம் ஃபீல் பண்ணும் அளவுக்கு போட்டோக்களை அடுக்கி உள்ளார்.

ஓணம் ஸ்பெஷல் விருந்தை தனது ஆண் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்கலான் பட நடிகை தாராளமாக சாப்பிடும் செம க்யூட்டான போட்டோக்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.
அமலா பால் முதல் மாளவிகா மோகனன் வரை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருக்கும் முக்கால்வாசி பேர் கேரள நடிகைகள் தான். நயன்தாரா ஞாயிற்றுக்கிழமையே குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று அமலா பால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன் என அத்தனை மலையாள நடிகைகளும் ஓணம் பண்டிகையை கொண்டாடும் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமையே மூச்சுத்திணற வைத்து விட்டனர்.

மாளவிகா மோகனன் வீட்டில் மெகா விருந்து: பாலிவுட்டில் மலைகா அரோரா வீடு முதல் மாளவிகா மோகனன் வீடு வரை ஓணத்திற்கான மெகா விருந்து வைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாழை இலையில் உணவை உண்டு ரசித்த காட்சிகளை நடிகைகள் வெளியிட்டுள்ளனர்.
தனது நண்பர்களுடன் மாளவிகா மோகனன் விருந்து சாப்பிட்டு, அவர்களுடன் அரட்டை அடித்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகின்றன.
இத்தனை பாய் ஃபிரெண்டா: நடிகை மாளவிகா மோகனன் இதுவரை வெளியிடாத அளவுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளதை பார்த்த ரசிகர்கள் இத்தனை பாய் ஃபிரெண்டா என கேட்டுள்ளனர். மேலும், இவர்கள் எல்லாம் நண்பர்களா அல்லது மாமா பசங்களா என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
தங்கலான் தெறிக்கும்: மாஸ்டர் படத்துக்கு பிறகு மாளவிகா மோகனன் தனுஷ் உடன் நடித்த மாறன் படம் அட்டு ஃபிளாப் ஆகி விட்டது. இந்நிலையில், பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, பசுபதி உடன் மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள தங்கலான் படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











