எல்லாத்துக்கும் மேல.. இவங்க தான் கொல வெயிட்டிங்காம்.. விஜய்க்கூட ஜோடியா மாளவிகா நடிக்கிறத பார்க்க?
சென்னை: மாஸ்டர் படத்துல தளபதி விஜய்க்கு ஜோடியா மாளவிகா மோகனன் நடிப்பதை பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங் என்ற கேள்விக்கு பிரபல நடிகை போட்ட ரிப்ளை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Recommended Video
லாக்டவுன் காரணமாக மூடப்பட்டு இருக்கும் திரையரங்குகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.
பல தொழில் துறைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தியேட்டர்களும் வரும் ஜூலை மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சருக்கு இஷ்டமில்லை
அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் பேசும் போது, ஆன்லைனில் புதுப்படங்களை வெளியிடுவது குறித்து தனக்கு ஒரு போதும் விருப்பம் இல்லை என்றும், இந்த லாக்டவுன் காரணத்தால், சில படங்கள் ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. விரைவில், இதற்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியாக
மலையாள நடிகை மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், கல்லூரி ஆசிரியையாக நடித்து வெளியான புகைப்படங்கள் மற்றும் "அந்த கண்ண பார்த்தாக்கா" லிரிக் வீடியோ மூலம் உறுதியாகி இருக்கிறது.

ரேஸர்
தல அஜித்தை போல ஃபார்முலா ஒன் பந்தயத்திலேயே ரேஸ் பைக் ஓட்டி அசத்தி இருக்கிறார் மாளவிகா மோகனன். தனக்கு பிடித்தமான ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்க திட்டமிட்டு இருப்பதாக அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

படுக்கையறையில்
இந்த லாக்டவுனில் படுக்கையறையிலேயே படுத்தபடியாக இருக்கும் தனது ஹாட் புகைப்படங்கள் முதல் க்யூட் புகைப்படங்கள் வரை பல போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கினார் நம்ம மாஸ்டர் ஹீரோயின். புத்தகம் படிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர், பல புத்தகங்களையும் இந்த லாக்டவுனில் படித்து வருகிறார்.

கொல வெயிட்டிங்
இந்நிலையில், தற்பொது, சென்னை கிராம்ஸ் எனும் சினிமா சம்பந்தப்பட்ட டிவிட்டர் பக்கம் ஒன்று, மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளை காண எத்தனை பேர் ஆவலோடு காத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, முதல் ஆளாக தானும் வெயிட்டிங் என மாளவிகா மோகனன் பதில் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

மாலுவ பார்க்க மரண வெயிட்டிங்
ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய மாஸ்டர் திரைப்படம், இத்தனை நாள் தாமதம் ஆகி வருவதையே தாங்கிக் கொள்ள முடியாமல் பல தளபதி ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மாளவிகா மோகனனின் பதிவு அவர்களுக்கு பூஸ்ட்டாக அமைய, நாங்களும் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கிறோம் மாலு என கமெண்ட் போட்டு தெறிக்க விடுகின்றனர்.

தயவு செஞ்சு
எங்களுக்கு மட்டும் ஏன் மா எந்த ஒரு ரிப்ளையும் பண்ண மாட்றீங்க என மாளவிகா மோகனனின் பெயரில் ஃபேன் கிளப் பேஜ் வைத்திருக்கும் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி வரவுள்ள நிலையில், நிச்சயம் விஜய், மாளவிகா மோகனன் காம்பினேஷன் காட்சிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications