ஆக்‌ஷன் த்ரில்லர் வெப்சீரிஸ்.. பிரபல பாலிவுட் ஹீரோ ஜோடியாகிறார் 'மாஸ்டர்' ஹீரோயின்!

By

சென்னை: மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பாலிவுட்டில் பிரபல ஹீரோ ஜோடியாக நடிக்கிறார்.

ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். சசிகுமார், விஜய் சேதுபதி, நவாஸூதின் சித்திக் உள்பட பலர் நடித்திருந்தனர்.

த கிரேட் ஃபாதர்

த கிரேட் ஃபாதர்

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான மாளவிகா, மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்த அவர், கன்னடப் படங்களிலும் நடித்தார்.

மாஸ்டர் ஹீரோயின்

மாஸ்டர் ஹீரோயின்

இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் இஷான் கட்டார் ஹீரோ. இந்தப் படமும் மாளவிகாவின் நடிப்பும் கவனிக்கப்பட்டது. நடிகை நயன்தாராவின் சாயலை கொண்டிருக்கிற மாளவிகா, இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ராஜ் மற்றும் டிகே

ராஜ் மற்றும் டிகே

இந்தப் படத்தை அடுத்து, கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் இப்போது பிரபல பாலிவுட் ஹீரோ ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார். இது வெப்சீரிஸ். அமேசான் பிரைம் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸை, 'பேமலி மேன்' வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றனர்.

ரூ.60 கோடிக்கு ஒப்பந்தம்

ரூ.60 கோடிக்கு ஒப்பந்தம்

ஆக்‌ஷன் த்ரில்லராக இந்த வெப் சீரிஸ் உருவாகிறது. அமேசான் பிரைமுடன் ஷாகித் கபூர் ரூ.60 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே இந்த வெப் சீரிஸில் அவர் நடிக்கிறார். தற்போது தெலுங்கு ஜெர்ஸி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஷாகித் அதை முடித்துவிட்டு இதில் நடிக்க இருக்கிறார்.

மஸபா மஸபா

மஸபா மஸபா

இன்னும் பெயரிடப்படாத இந்த தொடரின் ஷூட்டிங்கில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் கலந்து கொள்ள இருக்கிறார் மாளவிகா மோகனன். பேமிலி மேன் 2 தொடரின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை இப்போதுதான் முடித்துள்ளனர். மாளவிகா, ஏற்கெனவே 'மஸபா மஸபா' வெப் சீரிஸில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X