அடுத்து பிரமாண்ட ஆக்‌ஷனில் மிரட்டப் போகும் 'மாஸ்டர்' ஹீரோயின்..தற்காப்புக்கலை கற்கப் போகிறாராமே?

By

சென்னை: மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் அடுத்து நடிக்கும் பாலிவுட் படத்துக்காகத் தற்காப்பு கலையை கற்க இருக்கிறார்.

Recommended Video

Master Team special Wishes to Thalapathy Vijay | Malavika Mohanan, Anirudh

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஈரானிய இயக்குனர்

ஈரானிய இயக்குனர்

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் படங்களில் நடித்த இவர், கன்னடத்திலும் நடித்தார். இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் படத்தில் நடித்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இப்போது, விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மற்றும் சாந்தனு, நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஸ்ரீநாத் உட்பட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருந்தது.

லாக்டவுன்

லாக்டவுன்

கொரோனா தீவிரம் அடைந்ததால், பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக அதன் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின், மாளவிகா, இந்தி படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்தார்.

மம் பட இயக்குனர்

மம் பட இயக்குனர்

இப்போது அந்தப் படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. ஶ்ரீதேவி, நவாஸூதின் சித்திக் நடித்த 'மம்' என்ற படத்தை இயக்கியவர் ரவி உடையாவர். இவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் மாளவிகா மோகனன். ஹீரோவாக சித்தன்ட் சதுர்வேதி நடிக்கிறார். இவர் ஏற்கனவே கல்லி பாய் படத்தில் நடித்துள்ளார். இப்போது பன்டி அவுர் பப்லி 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்காப்பு கலை

தற்காப்பு கலை

இது ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம். இதற்காக மாளவிகா மோகனனிடம் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ளும்படி படக்குழு கூறியுள்ளது. இதையடுத்து அவர் தற்காப்பு கலையை கற்க இருக்கிறார். கொரோனா பிரச்னைகள் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்குகிறது. அப்போது படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X