அச்சச்சோ.. சூட்டிங் ஸ்பாட்டில் மாளவிகா மோகனனுக்கு இப்படி அடிப்பட்டுடுச்சே.. பதறிப்போன ரசிகர்கள்!

சென்னை: பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார் மாளவிகா மோகனன்.

அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

மலையாளத்தில் அறிமுகம்

மலையாளத்தில் அறிமுகம்

மலையாள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் மோகனின் மகள் தான் மாளவிகா மோகனன். கடந்த 2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் ஹீரோயின்

மாஸ்டர் ஹீரோயின்

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமான மாளவிகா மோகனன். இந்த ஆண்டு வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து மாஸ் காட்டினார்.

மாறனுக்கு வெயிட்டிங்

மாறனுக்கு வெயிட்டிங்

மாஸ்டர் படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். மாஃபியா படத்திற்கு பிறகு மாறன் படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன் அதன் இறுதி கட்ட படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டி வருகிறார். மாறன் திரைப்படம் எப்போ ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

பாலிவுட் படம்

பாலிவுட் படம்

2017ல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் இந்தி படத்தில் தாரா கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமான மாளவிகா மோகனன் தற்போது சித்தாந்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் யுத்ரா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஃபர்கான் அக்தர் எழுத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ரவி உத்யவார் இயக்கி வருகிறார்.

ஸ்டன்ட் செய்த மாளவிகா

ஸ்டன்ட் செய்த மாளவிகா

மாஸ்டர் படத்திலேயே மாளவிகா மோகனன் மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக் கொண்டு வருகிறார். சண்டை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீச்சராக வந்து சாந்தமாக நடித்திருந்தார். ஆனால், பாலிவுட் படமான யுத்ரா படத்தில் தான் அவருக்கு ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன.

கையில் காயம்

கையில் காயம்

அப்படி சமீபத்தில் நடந்த ஒரு ஸ்டன்ட் காட்சியின் போது மாளவிகா மோகனன் கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தால் இப்படி அடிபடுவது எல்லாம் சகஜம் தான் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பதறிய ரசிகர்கள்

பதறிய ரசிகர்கள்

என்ன மாலு உங்களுக்கு என்ன ஆச்சு என மாளவிகா மோகனன் கையில் ஏற்பட்ட லேசான காயத்தை பார்த்த ரசிகர்க்ள் பதறி போய் கமெண்ட் செய்து வருகின்றனர். சூட்டிங்கில் எந்தளவுக்கு பிசியோ அதே அளவுக்கு கவர்ச்சி போட்டோஷூட்களையும் நடத்தி ரசிகர்களுக்கு வேற லெவல் விருந்து கொடுத்து வரும் மாளவிகா மோகனனுக்கு ஒன்று என்றால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X