ப்ளீஸ் அமைதியாக இருங்க.. நயன்தாரா பற்றி நான் அப்படி சொல்லல.. பல்டி அடித்த மாளவிகா மோகனன்!

சென்னை : நயன்தாரா மீது எனக்கு மரியாதை உண்டு, நான் அவரை பற்றி அப்படி சொல்லவில்லை என நடிகை மாளவிகா மோகனன் விளக்கம் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன் தற்போது கிறிஸ்டி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் பிப்ரவரி 17ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கிறிஸ்டி மலையாளப்படம்

கிறிஸ்டி மலையாளப்படம்

அல்வின் ஹென்றி இயக்கத்தில் மேத்யூ தாமஸ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கிறிஸ்டி. இதில் மாளவிகா மோகனன் டீச்சராக நடித்துள்ளார். தன்னைவிட வயதில் மூத்த பெண்ணான மாளவிகாவை காதலிக்கும் இளைஞனாக மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். கிறிஸ்டி திரைப்படம் 17ந் தேதி வெளியாக உள்ளதால், இப்படத்திற்கான ப்ரோமோஷன் படுஜோராக நடந்து வருகிறது.

நயன்தாராவை வம்பிழுத்த மாளவிகா

நயன்தாராவை வம்பிழுத்த மாளவிகா

மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி அளித்த மாளவிகாவிடம், லேடி சூப்பர் ஸ்டார் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மாளவிகா, எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கை இல்லை. நடிகைகளை சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாமே என்றும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கத் தேவையில்லை. பாலிவுட் நாயகிகளான தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்ஸ் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே என்று கூறியிருந்தார்.

நடிப்பின் நாயகி என்ற நினைப்பா

நடிப்பின் நாயகி என்ற நினைப்பா

மாளவிகா மோகனன் நயன்தாரா பற்றி காட்டுத்தீபோல பரவியது. நயன்தாராவின் தீவிர ரசிகர்கள் பலர் மாளவிகாவை கண்டபடி விமர்சனம் செய்தார். நடித்ததே ஒன்று, இரண்டு படம் தான் எதற்குள் நடிப்பின் நாயகி போல நயன்தாராவை அடிக்கடி வம்புக்கு இழுப்பது சரியில்லை என்றும், அடுத்தவர்களை பற்றி பேசாமல் உங்கள் நடிப்பின் மீது கவனம் செலுத்துங்கள் என்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

நயன்தாரா மீது மரியாதை உண்டு

நயன்தாரா மீது மரியாதை உண்டு

இணையத்தில் பரவும் மோசமான கமெண்ட்டுகளால் பதறிபோன மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நான் குறிப்பிட்டு எந்த நடிகையை பற்றியும் சொல்லவில்லை. பெண் நடிகைகள் பற்றி என்னுடைய கருத்தை தெரிவித்தேன். நடிகை நயன்தாரா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறன். அவர் ஒரு சீனியர் நடிகை, அவரின் வளர்ச்சி அசாத்தியமான, அவரின் பயணத்தை நான் வியந்து பார்க்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று மாளவிகா பல்டி அடித்துள்ளார்.

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய மாளவிகா

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய மாளவிகா

அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்திருந்த மாளவிகா, ஒரு டாப் நடிகை ஹாஸ்பிடல் சீனில் தலைமுடி, லிப்ஸ்டிக் என அப்படியே புஃல் மேக்கப்பில் இருந்தாங்க, எப்படி ஒரு ஹாஸ்பிடல் சீன்ல இப்படி நடிச்சாங்க என்று தெரியவில்லை என்று நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் குறித்து பேசி வம்பு இழுந்து பேசியிருந்தார்.

சரியான பதிலடி கொடுத்த நயன்

சரியான பதிலடி கொடுத்த நயன்

இதற்கு கனெக்ட் பட ப்ரோமோஷனில் பதிலளித்த நயன்தாரா, ஹாஸ்பிடல் சீனில் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. கமர்ஷியல் ஃபிலிம், ரியலிஸ்டிக் ஃபிலிம்னு இருக்கு. ரியலிஸ்டிக் ஃபிலிம்ல அதற்கு ஏற்றமாதிரி அனைத்தும் கவனத்துடன் செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் இயக்குநர் என்ன சொல்கிறோரோ அதைத் செய்வது தான் ஒரு நடிகையின் வேலை எனறு சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X