ஒருத்தர் எப்படி இவ்வளவு அழகா இருக்க முடியும்? மாளவிகா மோகனனின் போட்டோ பார்த்து வியக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லாங் வியூ போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Master Loskesh Kanagaraj கொடுத்த Update • Thalapathy Vijay

மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

அதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் படங்களில் நடித்த இவர், கன்னடம் இந்தியிலும் நடித்தார்.

ஈரானிய இயக்குனர்

ஈரானிய இயக்குனர்

இந்தியில் புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் படத்தில் நடித்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினியின் 'பேட்ட' மூலம் தமிழில் அறிமுகமானார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார், விஜய் சேதுபதி, சிம்ரன், நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர்.

விஜய்யின் மாஸ்டர்

விஜய்யின் மாஸ்டர்

பிரபல ஒளிப்பதிவாளர் யு.கே.மோகனனின் மகளாக இவர், இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஸ்ரீநாத் உட்பட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

எதிர்பார்க்கிறார்

எதிர்பார்க்கிறார்

இதன் ரிலீஸை ரசிகர்களை போலவே மாளவிகாவும் எதிர்பார்த்து இருக்கிறார். ஏனென்றால் ஹீரோயினாக அவர் நடிப்புக்கு இதில்தான் முக்கியத்துவம் என்கிறார்கள். இந்தப் படத்தை அடுத்து தனுஷ் ஜோடியாக ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் மாளவிகா.

ஹாட் புகைப்படங்கள்

ஹாட் புகைப்படங்கள்

இது ஒருபக்கம் இருந்தாலும் அடிக்கடி இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் வேலைகளை செய்து வருவதில் மாளவிகா அசராதவர். இதற்காகவே காத்திருக்கிறார்கள், ரசனையான ரசிகர்கள். சமீபத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளித்தபடி அவர் வெளியிட்ட போட்டோ வைரலானது.

போட்டோஷூட்

போட்டோஷூட்

பேரரசி, காட்டுவாசி என பழைய லுக்குகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்த இந்த மாஸ்டர் ஹீரோயின், நேற்று முன் தினம் வெறும் துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு நிற்கும் படு கவர்ச்சியான போட்டோவை பதிவு செய்திருந்தார். போதாதா ரசிகர்களுக்கு. அந்த போட்டோவை வைரலாக்கி இருந்தனர்.

காலை விரித்தபடி

காலை விரித்தபடி

இந்நிலையில் இப்போது, சூரிய அஸ்தமன நேரத்தில் ஹாயாக காலை விரித்தபடி ரிலாக்ஸ் மூடில் அமர்ந்திருக்கும், கிளாமர் போட்டோவை பதிவு செய்துள்ளார். இதை சினிமா பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். கமென்ட்களும் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன.

இவ்வளவு அழகா?

இவ்வளவு அழகா?

அருமையான வியூ.. எங்க எடுத்தீங்க, இந்த போட்டோவை? என்று சிலர் கேட்டுள்ளனர். ஒருவர், உங்கள் போட்டோ பார்க்கும்போது எப்படி ஒருத்தர் இவ்வளவு அழகா இருக்க முடியும்? என்று கேட்கத் தோன்றுகிறது என ஆச்சரியப்பட்டுள்ளார். லாங் கிளிக் ஏன்? இதுக்கு போட்டோ போடாமலேயே இருக்கலாம் என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். இந்த போட்டோ வைரலாகிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X