பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் மாஸ்டர் நாயகி!

சென்னை: மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்.

தற்போது தமிழிலும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார், தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆகிவிட்டார்.

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் மூலமாகவே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

சூப்பர் ஸ்டார் படத்தில்

சூப்பர் ஸ்டார் படத்தில்

மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் அறிமுகமானார். பூங்கொடி எனும் கதாபாத்திரத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக பேட்ட படத்தில்

மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

கவனம் பெற்றார்

கவனம் பெற்றார்

பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தார் மாளவிகா மோகனன். பெரிய அளவில் படத்தில் இடம் இல்லை என்றாலும் தளபதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

இதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார் மாளவிகா மோகனன். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது. இதுமட்டுமின்றி மாளவிகா மோகனனுக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கவுள்ள படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X