என்னது டிரெஸ் போடுறத ரொம்ப மிஸ் பண்றாரா.. செல்ஃபி போட்டு தெறிக்கவிடும் மாளவிகா மோகனன்!
சென்னை: இப்போதைக்கு தளபதி விஜய் ரசிகர்களின் தலைவியாக இருப்பது மாளவிகா மோகனன் தான்.
Recommended Video
பேட்ட படத்தில் அறிமுகமானாலும், மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதையே பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட போட்டோஷூட்கள் நடத்தி தனது இன்ஸ்டா ஃபாலோயர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறார்.

பொதுவாவே மாடலிங்கில் இஷ்டம்
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளான மாளவிகா மோகனன் பட்டம் போலே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடித்து கலக்கி வரும் இவர், மாடலிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இவர் வெளியிடும் ஃபேஷன் போட்டோக்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

காட்டுவாசி பெண்
வீட்டில் குட்டி டிரெஸ் போட்டு எடுத்த போட்டோக்களை மாளவிகா மோகனனின் அப்பாவே எடுத்து இருந்த நிலையில், பாதி ஆடையை கழட்டி விட்டபடி காட்டுவாசி பெண் போல எடுக்கப்பட்ட மாளவிகா மோகனனின் கான்செப்ட் ஆர்ட் போட்டோஷூட்டை பிரபல புகைப்படக் கலைஞர் ரோஹன் ஸ்ரேஷ்தா எடுத்து இருந்தார்.

திக்குமுக்காட வைத்தார்
லாக்டவுன் தளர்வு காரணமாக தனக்கு ரொம்பவே பிடித்த வீட்டின் படுக்கையறையை விட்டு வெளியே வந்த நடிகை மாளவிகா மோகனன், ரெசார்ட் ஒன்றின் நீச்சல் குளத்தில், பிகினி உடையில் குளிக்கும் போட்டோவை போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்குமுக்காட செய்தார். அந்த புகைப்படத்திற்கு அதிகப்படியான லைக்குகளும் குவிந்தன.

சில் அவுட்
டிம் லைட்டில் சில் அவுட் சாயலில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு தனது மாடலிங் ரசனனையை வெளிக்காட்டி இருந்தார் இந்த மாஸ்டர் நாயகி. பைக் ரேஸ், போட்டோகிராஃபி என கைவசம் ஏகப்பட்ட வித்தைகளையும் கற்று வைத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

டிரெஸ் பண்றத மிஸ் பண்றேன்
இந்நிலையில், தற்போது செம க்யூட்டான மிரர் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் இந்த மாளவிகா மோகனன். மேலும், இப்போதெல்லாம் நல்லா டிரெஸ் பண்றத மிஸ் பண்றேன் என்ற அவரது கேப்ஷனை பார்த்து என்னது டிரெஸ் போடுறதே இல்லையா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கூடும் எண்ணிக்கை
சும்மா டிவி சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களே 5 மில்லியன், 10 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கும் நிலையில், மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கு வெறும் 1.5 மில்லியன் ரசிகர்களே இருந்தனர். தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் அவருக்கு தற்போது 1.7 மில்லியன் ரசிகர்கள் கூடியுள்ளனர். 10 மில்லியன் எல்லாம் எப்போ வருமோ?


Click it and Unblock the Notifications