நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மட்டுமில்லைங்க.. நம்ம மாஸ்டர் ஹீரோயினும் ஓணம் கொண்டாடி இருக்காங்க!

சென்னை: கோலிவுட்டை இப்பவும் பல கேரள நடிகைகள் தான் அலங்கரித்து வருகின்றனர் என்பதற்கு நேற்று நடந்த ஓணம் பண்டிகையே மிகப்பெரிய சாட்சியாக மாறி உள்ளது.

Recommended Video

Nayanthara Vignesh Shivan Couple Onam Celebration | oneindia tamil

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷின் ஓணம் பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனனும் ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

ஹாஷ்டேக் டிரெண்டிங்

ஹாஷ்டேக் டிரெண்டிங்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொச்சினுக்கு விமானத்தில் பறந்த நடிகை நயன்தாரா, கேரளா ஸ்டைல் செலையை அணிந்து கொண்டு, செம ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து ஹாஷ்டேக்கை உருவாக்கி வேற லெவலில் டிரெண்ட் செய்தனர்.

குடும்பத்துடன் கொண்டாட்டம்

குடும்பத்துடன் கொண்டாட்டம்

நயன்தாராவின் லவ் ஓணம் களை கட்டிய நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் கொண்டாடிய ஓணம் பண்டிகை புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தன. தலை வாழை இலை போட்டு, ஓணம் ஸ்பெஷல் டிஷ் எல்லாம் செய்து வைத்து வெகு விமர்சையாக கொண்டாடிய புகைப்படங்களையும் கீர்த்தி பகிர்ந்துள்ளார்.

மாஸ்டர் ஹீரோயினும்

மாஸ்டர் ஹீரோயினும்

பிகில் நடிகை நயன்தாரா, சர்கார் நாயகி கீர்த்தி சுரேஷ் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிடும் போது, நம்ம மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் மட்டும் சும்மா இருப்பாரா, அவரும் கேரளா தானே.. தனது ரசிகர்களுக்காக ஓணம் ஸ்பெஷல் உடையை அணிந்து கொண்டு, வாழ்த்து சொல்லி தரிசனத்தையும் கொடுத்துள்ளார்.

சிகப்பு சேலை

சிகப்பு சேலை

ஓணம் பண்டிகை என்றாலே நடிகைகள் ஹாஃப் ஒயிட் கேரளா ஸ்டைல் சேலையை அணிந்து கொண்டு அழகு ஓவியமாக மாறிவிடுவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், ஃபேஷன் பிரியையான மாளவிகா மோகனன், ஹாஃப் ஒயிட் சேலைக்கு பதிலாக, சிகப்பு நிற சேலையை இந்த ஓணத்துக்கு ட்ரை பண்றேன் என செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

பாதங்கள் மட்டும்

பாதங்கள் மட்டும்

சிகப்பு நிற சேலை மட்டுமின்றி, கூந்தலில் தங்க நிற ஆபரணம், இடுப்பில் தங்க ஒட்டியாணம், காதுகளில் ஜிமிக்கி கம்மல், கால்களில் தங்க கொழுசு என அழகு ராணியாகவே மாளவிகா மோகனன், கடற்கரை அருகே பாறை மீது நின்றபடி போட்டோஷூட் நடத்தியுள்ளார். முன் புறம், பின் புறம், பாதங்கள் என தனித்தனி புகைப்படங்களையும் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X