Malavika Mohanan: ராஜா சாப் படம் அப்டேட் கொடுத்த மாளவிகா மோகனன்.. அலறும் இணையம்!

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் முகத்தை மாற்றியது மட்டும் இல்லாமல், இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா மட்டும்தான் என்ற பிம்பத்தை உடைத்த நடிகரில் பிரபாஸுக்கு முக்கிய இடம் உண்டு. இவரது நடிப்பில் அடுத்த 7,8 ஆண்டுகளுக்கான கால்ஷீட் எல்லாம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டார். அடுத்து இவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் ராஜா சாப். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக பிரபாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் படம் குறித்து படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அப்டேட் கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பிரபாஸின் 45வது பிறந்த நாளில் ரிலீஸ் செய்தது. அதில், "ஹாரர் தான் புதிய நகைச்சுவை" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் வயதான கதாபாத்திரத்தில் பிரபாஸ் உள்ளார். கையில் சுருட்டுடன் காணப்படும் அவர் பார்க்கவே மாஸான லுக்கில் உள்ளார். இந்தப் படம் திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தினை மாருதி இயக்குகின்றார். பீப்பிள் மீடியா பேக்ட்ரி தயாரிக்கின்றது. இப்படத்தில் இவர் இருவேறு தோற்றங்களில் நடிக்கின்றார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

malavika mohanan prabhas raja saab update

இந்தப் படத்தின் மூலம், நடிகை மாளவிகா மோகனன் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். ராஜா சாப் படம் மாளவிகா மோகனின் நேரடி தெலுங்குப் படம் ஆகும். மேலும் மாளவிகா மோகனனைப் பொறுத்தவரையில் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். விளம்பரப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனனுக்கு சினிமா ஆசை இருந்ததால் தொடர்ந்து சினிமாவிற்கும் முயற்சி செய்து வந்தார்.

malavika mohanan prabhas raja saab update

மாளவிகா மோகனன்: தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்றைக்கு இந்தியத் திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகையாக வளர்ந்துள்ளார். மேலும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தும் வருகின்றார். அண்மையில் வெளியான தங்கலான் படத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தி கோலிவுட்டை மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்கவைத்தார். மேலும் இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் என்பதால் இவரது வசன உச்சரிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

malavika mohanan prabhas raja saab update

ஷாக் ட்ரீட்மெண்ட்: இந்த ஆச்சரியத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வருவதற்குள், இந்தியில் இவரது நடிப்பில் யுத்ரா படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் இவரது அட்டகாசமான நடிப்பு, குறிப்பாக கிளாமராக இவர் நடிப்பில் அசத்தியிருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இப்படியான நிலையில், இன்று அதாவது டிசம்பர் 1ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற, ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டா மாளவிகா மோகனன்.

malavika mohanan prabhas raja saab update

ராஜாசாப் அப்டேட்: அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ராஜா சாப் படம் குறித்து அப்டேட் கொடுத்தார். அதாவது, " ராஜா சாப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் சிறப்பாக வந்துகொண்டு உள்ளது. மேலும் எனக்குப் பிடித்த பிரபாஸ் இந்தப் படத்தில் உள்ளார். ராஜா சாப் எனது முதல் தெலுங்கு படம் என்பதால் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பிரபாஸ் ரசிகர்களையும் மாளவிகா மோகனன் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

malavika mohanan prabhas raja saab update

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X