மாஸ்டர் படத்துல ரொமான்ஸ் மட்டுமில்ல.. பறந்து பறந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பண்ணப் போறாங்களாம் மாளவிகா!
Recommended Video
சென்னை: சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனின் ரோல் குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன.
பொங்கல் லீவ் முடிந்துள்ள நிலையில், மீண்டும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படத்திற்காக சில மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளை நாயகி மாளவிகா மோகனன் பயிற்சி பெற்று வரும் தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய்க்கு ஜோடி
பேட்ட படத்திற்கு பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். கைதி படத்தில் ஹீரோயின் மற்றும் பாடல்களே இல்லாமல் படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் வெறும் ரொமான்ஸ் செய்ய மட்டும் மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்யவில்லையாம்.

மார்ஷியல் ஆர்ட்ஸ்
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் வேற லெவல் ஆக்ஷன் பெர்ஃபார்மன்ஸ் செய்ய காத்திருக்கிறார். மேலும், மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளையும் மாஸ்டர் படத்திற்காக மாளவிகா மோகனன் தீவிரமாக பயின்று வருகிறார்.

பார்க்கவர்
மார்ஷியல் ஆர்ட்ஸ் என்றால் குங்ஃபூ, கராத்தே போன்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று அல்ல, ஹாலிவுட் படங்களில் நாயகர்கள் பில்டிங் பில்டிங்காக எகிறி குதிக்கும் Parkour எனும் கரணம் தப்பினால் மரணம் அளவிற்கான மார்ஷியல் ஆர்ட்ஸை கற்று வருகிறாராம் நம்ம மாளவிகா மோகனன்.

செம்ம தில்
கிளாமர் குயினாக மட்டுமின்றி மாளவிகா மோகனன் இயல்பாகவே செம்ம தில்லானவர். மாஸ்டர் படத்தில் மாளவிகாவை போல ஆண்ட்ரியாவுக்கும் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போ மாஸ்டர்
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கே இப்படியொரு மாஸ் இருக்கிறது என்றால், அப்போ மாஸ்டர் விஜய்க்கு எப்படி மாஸ் இருக்கும் என நினைத்தாலே தளபதி ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விடுவார்கள்.

மான்ஸ்டர் மோதல்
மாஸ்டர் விஜய்யும் மான்ஸ்டர் விஜய்சேதுபதியும் மோதவுள்ள அதிரடி ஆக்ஷன் காட்சி அடுத்த வாரம் மீண்டும் ஷிமோகாவில் பிரம்மாண்டமாக படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஜீ தமிழ் விருது விழாவில் பொங்கல் விடுமுறை கழித்து விஜய் - விஜய்சேதுபதி மோதும் சண்டை காட்சிகளை படமாக்க லோகேஷ் கனகராஜே ஆர்வமாக இருப்பதை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

200 கோடி
மாஸ்டர் படம் இன்னும் ஷூட்டிங்கே முடியாத நிலையில், தியேட்டர் உரிமைகள், சேட்டிலைட் உரிமைகள், ஏரியா டிஸ்ட்ரிப்யூஷன் என பல பிரிவுகளிலும் பிசினஸ் ஒரு பக்கம் தீயாய் நடந்து வருகிறது. இதுவரை 200 கோடிக்கும் மேலான ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஆகியுள்ள தகவலும் நேற்று வெளியாகி இருந்தது. வரும் சம்மருக்காக தளபதி ஃபேன்ஸ் செம்ம வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











