Just In
- 25 min ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 3 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 10 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 15 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- News
நடுங்கிப்போன சீர்காழி.. வீடு புகுந்து கழுத்தை அறுத்து 2 பேரை கொன்ற கொள்ளையர்.. 16 கிலோ தங்கம் கொள்ளை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் விஜய்.. ஆனா அந்த ஃபீலே இல்லை.. உருகிய மாளவிகா மோகனன்!
சென்னை: நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நடிகர் விஜய் என மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாஸ்டர் ஆல்பத்தின் அந்த சீக்ரெட்டை போட்டுடைத்த அனிருத்.. தளபதி ரசிகர்கள் மிரண்டு போய்ட்டாங்க!

விஜய் மனைவி
இதேபோல் நடிகை மாளவிகா மோகனன், விக்னேஷ் சிவன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விஜயின் பெற்றோரான இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரும் அவரது மனைவி ஷோபாவும் பங்கேற்றனர். இதேபோல் நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

ஹம்பிளான ஸ்டார்
படத்தின் தயாரிப்பாளரான ஸேவியர் பிரிட்டோ மற்றும் அவரது மகள் ஸ்னேகா பிரிட்டோ உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மாளவிகா மோகனன் படம் குறித்து பேசியபோது, நடிகர் விஜயை பாராட்டி தள்ளி விட்டார். இதுவரை தான் பணியாற்றிய ஸ்டார்களிலேயே மிகவும் ஹம்பிளான ஸ்டார் விஜய்தான் என்றார்.

நான் ரொம்ப லக்கி
நாட்டில் பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவருடன் நடிக்கிறோம் என்ற ஃபீலே இல்லை என்றும் கூறினார் மாளவிகா மோகனன். முதன் முதலில் தமிழ் நாட்டில் ஸ்டேஜில் பேசுகிறேன். தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள். நான் ரொம்ப லக்கி, ரஜினி சார் கூட நடிச்சேன், அஜித் சார் கூட நடிச்சேன். இப்போ விஜய் சார் கூட நடிச்சுருக்கேன்.

நல்ல நண்பர்
பெரிய பெரிய ஸ்டார்ஸ் கூட நடிச்சுக்கிட்டு இருக்கேன். மேலும் லோகேஷ் கனகராஜ், தான் பணியாற்றிய இயக்குநர்களிலேயே மிகவும் கூலான இயக்குநர் என்றும் புகழ்ந்து தள்ளினார். நிகழ்ச்சியில் பேசிய ரம்யா, இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜயுடன் நல்ல உறவு கிடைத்துள்ளது என்று கூறினார். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல நண்பர் கிடைத்துவிட்டார் என விஜயை புகழ்ந்தார்.