சிரிச்சே செத்துட்டேன்.. தன்னைப்பற்றிய மீம்ஸ்களை ரசித்த மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்!

சென்னை: தன்னைப்பற்றிய மீம்ஸ்களை பார்த்து சிரித்தே செத்துவிட்டதாக கூறியுள்ளார் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

அடுத்து தனது இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

கடந்த 13 ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆனது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் ஓடிடியிலும் ரிலீஸ் ஆனது மாஸ்டர் படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இந்தப் படம்.

வாய்ப்பு கொடுக்கப்படவில்லை

வாய்ப்பு கொடுக்கப்படவில்லை

இதேபோல் மாளவிகா மோகனன் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாளவிகா மோகனனுக்கு பெரிதாக பர்ஃபாமன்ஸுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

விஜய்யிடம் கோபம்

விஜய்யிடம் கோபம்


இந்நிலையில் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கொடுத்த சில எக்ஸ்பிரஷன்களை மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் படத்தில் இடைவேளைக்கு முன்னதாக மாளவிகா மோகனன், விஜயிடம் கோபமாக பேசுவார்.

பல் துலக்குவது..

பல் துலக்குவது..

அந்தக் காட்சியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த காட்சியின் ரியாக்ஷன்களை வைத்து பல் துலக்குவது, சென்டர் ஃபிரஷ் சாப்பிடுவது, சரக்கு பாட்டிலை ஓபன் செய்வது, பால் பாக்கெட்டை கடித்து பிய்ப்பது என பங்கம் செய்திருந்தனர்.

தாமதமாகத்தான் பார்த்தேன்

தாமதமாகத்தான் பார்த்தேன்

இந்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தன்னைப் பற்றிய மீம்ஸ் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன். அவர் தெரிவித்திருப்பதாவது, என்னைப் பற்றிய மீம்ஸ் திருவிழாவை நான் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது தோழர்களே.

சிரித்தே செத்துவிட்டேன்

சிரித்தே செத்துவிட்டேன்

என்னை நன்றாகச் சிரிக்க வைத்த, எனக்குப் பிடித்தமான சில மீம்ஸை நான் பகிர்கிறேன். (அந்த டூத்பேஸ்ட் மீமைப் பார்த்து சிரித்தே செத்துவிட்டேன்) உங்களைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் போர் அடிக்கும் இல்லையா?"

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X