சிங்கம் போல நடிக்கிறாரு தனுஷ்.. ரெண்டு பேருக்கும் அதுனா அவ்ளோ உயிர்.. மனம் திறந்த மாளவிகா மோகனன்!

சென்னை: டி43 படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூலை முடித்து விட்டோம் என ட்வீட் போட்டுள்ள மாளவிகா மோகனன், ஏகப்பட்ட ரகசியங்களையும் மனம் திறந்துள்ளார்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தனுஷின் டி43 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

தனுஷ் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்தும் வைரலாக்கி வருகிறார்.

பங்கம் பண்ணிய மீம்ஸ்

பங்கம் பண்ணிய மீம்ஸ்

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு பலமா நடிக்க வாய்ப்பு கிடைத்ததே ஒரே ஒரு இடம் தான். அந்த இடத்தில் அவர் பண்ண எக்ஸ்பிரஷன்களை ஏகப்பட்ட போட்டோ மீம்களாக போட்டு அவரையே லைக் செய்யவும் வைத்து விட்டனர் மீம் கிரியேட்டர்கள்.

முதல் ஷெட்யூல் ஓவர்

முதல் ஷெட்யூல் ஓவர்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் டி43 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில், அந்த படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து விட்டதாக தற்போது தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களுடன் ட்வீட் போட்டு வைரலாக்கி உள்ளார்.

சிங்கம் தனுஷ்

சிங்கம் தனுஷ்

மேலும், நடிகர் தனுஷ் ஒரு நடிப்புச் சிங்கம் என்றே பாராட்டி உள்ளார் மாளவிகா மோகனன். ஷூட்டிங் நேரத்தில் அவர் சொல்லிக் கொடுக்கும் விஷயங்கள், அவரது நகைச்சுவைத் திறமை என அனைத்தையும் பாராட்டி உள்ள மாளவிகா மோகனன், அடுத்த ஷெட்யூலில் சீக்கிரமே இணைய ஆவலோடு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேகி லவ்

மேகி லவ்

எனக்கும் தனுஷுக்கும் ரொம்பவே பிடிச்ச உணவு மேகி என்கிற ரகசியத்தையும் இந்த ட்வீட்டில் போட்டு உடைத்துள்ளார் நம்ம மாஸ்டர் நாயகி. நீச்சல் குளம் அருகே இருவரும் செம ஃபன்னாக பேசிக் கொண்டிருக்கும் போது க்ளிக் செய்யப்பட்ட போட்டோக்களை ஷேர் செய்து தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

ஹாலிவுட் போறாரு

ஹாலிவுட் போறாரு

அடுத்ததாக அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகவுள்ள நெட்பிளிக்ஸின் கிரே மேன் ஷூட்டிங்கிற்காக தனுஷ் விரைவில் ஹாலிவுட்டுக்கு ஷூட்டிங் போகிறார் என்கிற தகவலும் கசிந்துள்ளது. ஜகமே தந்திரம், கர்ணன், பாலிவுட் படமான அட்ரங்கி ரே என அடுத்தடுத்த படங்களும் ரிலீசுக்கு வெயிட்டிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X