இது எப்ப..? பார்முலா ஒன் டிராக்கில் ரேஸ் பைக்கில் பறந்த 'மாஸ்டர்' ஹீரோயின்! 'தலைவி வேற ரகமாம்!
சென்னை: பார்முலா ஒன் டிராக்கில் விஜய்யின் மாஸ்டர் ஹீரோயின் ரேஸ் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.

பியான்ட் த கிளவுட்ஸ்
பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்த அவர், கன்னடப் படங்களிலும் நடித்தார். இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் இஷான் கட்டார் ஹீரோ. இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இப்போது, விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கொரோனா
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப் படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறார் மாளவிகா. கொரோனா காரணமாக வீடுகளுக்குள் இருக்கும் நடிகர், நடிகைகள் தங்களது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

பைக் ரேஸ் வீடியோ
நடிகை மாளவிகாவும் அதில் அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு வருவார். அவர் இப்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், மாளவிகா, ரேஸ் பைக்கில் வந்து நிற்கிறார். சிலர் தமிழில் பேசிக்கொண்டிருக்கின்றனர். நான் வேகமாக போகலை, மெதுவாகத்தான் ஓட்டினேன் என்று புன்னகைத்துக் கொண்டே சொல்கிறார் மாளவிகா. பின்னர் அவர் ஹெல்மெட்டை ஒருவர் கழற்றி விடுகிறார்.

பார்முலா ஒன் டிராக்
இதுபற்றி குறிப்பிட்டுள்ள மாளவிகா, பைக் ஓட்டுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். கடந்த வருடம் ஜூன் மாதம் நொய்டாவில் உள்ள, சர்வதேச பார்முலா ஒன் டிராக்கில், சிறந்த பைக் ரேஸர்களுடன் பைக் ஓட்டி சென்றேன். இதற்கு முன் வழக்கமான பைக்குகளையே ஓட்டி இருப்பதால் ரேஸ் பைக்கில் அவர்களை போல வேகமாக செல்ல முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

சேகர் கபூர்
இதையடுத்து ஏராளமான பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இயக்குனர் சேகர் கபூர், 'என்ன பைக் ஓட்டினீர்கள்" என்று கேட்டுள்ளார். அதற்கு, யமஹா R15 வெர்சன் 3 என்று குறிப்பிட்டுள்ளார் மாளவிகா. நடிகை ஷோபிதா துலிபாலா, சூப்பர் எனக்கும் இதுபோல பைக் ஓட்டணும்' என்று கேட்க, கொரோனா பிரச்னை முடியட்டும் போகலாம் என்று கூறியுள்ளார் மாளவிகா.

தலைவி வேற ரகம்
இன்னும் சிலர் பைக் ரேஸ் போகும் முன் செய்ய வேண்டிய அறிவுரைகளை கூறியுள்ளனர். அதில், எனது தலைமுடி, பல்லின் சிக்கிக்கொண்டது. அதனால் விதிகளை கடைபிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர், 'தலைவி வேற ரகம், பார்த்து உஷாரு' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











