'இந்த கிளாமர் பத்தல, உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம்' மாஸ்டர் ஹீரோயினை மாஸாக கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை: மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனனின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.

பியான்ட் த கிளவுட்ஸ்
பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்த மாளவிகா மோகனன், கன்னடப் படங்களிலும் நடித்தார். இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் இஷான் கட்டார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

மாஸ்டர் ஹீரோயின்
இப்போது, விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மற்றும் சாந்தனு, நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஸ்ரீநாத் உட்பட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. 15 ஆம் தேதி பாடல் வெளியீடு நடக்கிறது. அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்தியில் நடிக்கிறார்
இந்தப் படத்தை அடுத்து சூர்யா ஜோடியாக அருவா படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது ராஷ்மிகா மந்தனா நடிப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் இப்போது இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை, பர்ஹான் அக்தரின் எக்சல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. மற்ற நடிகர்கள் விவரங்கள் வெளியாகவில்லை.

கிளாமர் பத்தல
இந்நிலையில் மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. இதற்கு ரசிகர்களும் கண்டபடி கமென்ட் போட்டு வருகின்றனர். ஒரு ரசிகர், 'கிளாமர் பத்தல... உங்ககிட்ட இன்னும் எதிர்பாக்கிறோம்' என்று கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர், இதே டிரஸ்ல தீபிகா படுகோனும் வந்திருந்தாங்களே... ஒரு நிமிஷம் அவங்கதான்னு நினைச்சுட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.

அனிருத்கிட்ட மட்டும்
சில ரசிகர்கள், இந்த போட்டோவை பார்த்து தீபிகா என்று நினைத்ததாகத் தெரிவித்துள்ளனர். விஜய் ரசிகர்கள், 'தளபதியோட உங்களை பார்க்க ஆர்வமா இருக்கிறோம்' என்று கூறியுள்ளனர். ஒரு குசும்பு ரசிகர், 'அக்கா, அந்த அனிருத்கிட்ட மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க' என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இன்னொரு ரசிகர், 'ஏற்கனவே போட்ட போட்டோ மாதிரியே ஏன் திரும்பவும் போடறீங்க? என்று கேட்டுள்ளார்.

ஏதாவது கேப்ஷன்
வேறொரு ரசிகர், இப்படி போட்டோவ போட்டு, ரொம்ப டார்ச்சர் பண்றீங்க தோழி என்று கூறியுள்ளார். ஒரு ரசிகர், போட்டோ போட்டா, ஏதாவது கேப்ஷன் போடணும். அடுத்த போட்டோவுல எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதெல்லாம் சரி, நாங்க பிகினிக்கு வெயிட் பண்றோம்' என்று சிலர் தெரிவித்துள்ளனர். மாளவிகாவின் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











