கண்ணு ரெண்டையும் நோண்டி போடுவேன் நோண்டி... தளபதி ஹீரோயின் தான்சான்யாவில் ஷாப்பிங்... வைரல் ஸ்டில்
சென்னை: ஆப்ரிக்க நாடான தான்சான்யாவில் தளபதி 64 ஹீரோயின், மாளவிகா மோகனன் ஷாப்பிங் சென்ற கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே, நிர்மயாகம், த கிரேட் ஃபாதர், இந்தியில் பியான்ட் த கிளவுட்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இப்போது, தளபதி 64 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஸ்ரீநாத், ஸ்ரீமன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

தான்சான்யா
இதன் ஷூட்டிங்கில் இப்போது விஜய்-விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாளவிகா மோகனன், ஆப்ரிக்க நாடான தான்சான்யாவில் ஷாப்பிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

பழக்கடை
அங்குள்ள சாலையோரப் பழக்கடையில் அவர் பழங்கள் வாங்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படங்களை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

குறும்புக்கார ரசிகர்
அந்தப் படத்தில் ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் மாளவிகா மோகனனை பார்த்தபடி இருக்கிறார். அதைக் குறிப்பிட்டுள்ள குறும்புக்கார ரசிகர் ஒருவர், அந்தப் புகைப்படத்தின் கீழே, கவுண்டமணி வடிவேலு காமெடியை இணைத்து எழுதியுள்ளார்.

கண்ணு ரெண்டையும்
அதாவது, டேய் ஆப்ரிக்கா மண்டையா... என் செல்லத்தை அப்படி பார்க்காதடா. கண்ணு ரெண்டையும் நோண்டி போடுவேன் நோண்டி.. என்று ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார். இதையும் எராளமானோர் லைக் பண்ணியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











