அந்த ஹிட் படத்தின் இரண்டாவது பாகம்.. 'மாஸ்டர்' பட ஹீரோயின் ஆசை.. நிறைவேற்றுவாரா பிரபல நடிகை?
சென்னை: அந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறியிருக்கிறார் மாஸ்டர் ஹீரோயின்
Recommended Video
நடிகை ரிமா கல்லிங்கலும் அவர் கணவர் ஆஷிக் அபுவும் இணைந்து தயாரித்த மலையாள படம், வைரஸ்.
ஆஷிக் அபு இயக்கி இருந்த இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, டோவினோ தாமஸ், ரகுமான், இந்திரஜித், ரேவதி, மடோனா செபாஸ்டியன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

சுகாதார ஊழியர்
நிபா வைரஸ் தாக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி இந்த படம் வெளியான இந்தப் படத்தில் ரிமா ஹீரோயினாக நடித்திருந்தார். உயிர்களை காப்பாற்றப் போராடும் சுகாதார ஊழியர்களையும் மருத்துவர்களையும் ஹீரோவாக காட்டிய படம் இது.

மாளவிகா மோகனன்
இதையடுத்து படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் ரீமா கல்லிங்கல். படத்தின் சில ஒர்க்கிங் ஸ்டில்களையும் வெளியிட்டிருந்தார். இதையடுத்து இதில் கமென்ட் பதிவிட்ட, மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன், இதன் அடுத்த பாகத்தை உருவாக்க இது சரியான நேரம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த வைரஸ்
இதையடுத்து பல ரசிகர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஒருவர், கொரோனாவுக்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதை சொல்லித்தந்த படம் இது. இந்தப் படத்துக்குப் பின்னால் உள்ள அனைவருக்கு நன்றி. இது அடுத்த வைரஸ் பற்றிய படத்துக்கு சரியான நேரம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா
வைரஸின் விளைவுகளை சிறப்பாக உணர வைத்த படம் இது. அதன் இரண்டாம் பாகத்தை கொரோனாவை வைத்து உருவாக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர். வைரஸ் இரண்டாம் பாகத்துக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள சிலர், அந்தப் படத்தில் ரிமாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











