தளபதி ரசிகர் ஆசையை நிறைவேற்றிய மாளவிகா.. என்ன செஞ்சார் தெரியுமா?

டெல்லி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' ஷூட்டிங் டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

காற்று மாசு உள்ளிட்ட பிரச்சனைகளால், அவ்வப்போது விஜய் பட ஷூட்டிங் தடை பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று 'தளபதி 64' ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகை மாளவிகா மோகனன், இரண்டாம் நாள் ஷூட்டிங்கின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தளபதி 64

தளபதி 64

எக்ஸ் பி ஃபில்ம் க்ரியேட்டர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஆந்தோனி வர்கீஸ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘தளபதி 64' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். சென்னை மற்றும் டெல்லியில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64' படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாளவிகா மோகனன் டெல்லிக்கு சென்ற தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

ரசிகரின் விருப்பம்

மாளவிகாவின் அந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் அவருக்கு, வாழ்த்துகளை தெரிவித்தனர். அதில் ஒருவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுமாறு கோரிக்கை வைத்தார். தற்போது அந்த ரசிகரின் விருப்பத்தை தீர்த்து வைக்கும் விதமாக தனது புகைப்படத்தை மாளவிகா வெளியிட்டுள்ளார்.

முகத்தை காட்டவில்லை

பேட்ட படத்தில் பூங்கொடியாக நடித்த மாளவிகா மோகனன், 'தளபதி 64' படத்தில் என்ன லுக்கில் நடித்திருப்பார் என்ற ரசிகர்களின் ஆர்வத்தை மேலும், தூண்டும் வகையில் தனது முகத்தை காட்டாமல், அந்த புகைப்படத்தை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X