Malavika Mohanan: இதுக்கு பேரு தான் டப்பிங்கா?.. மிருகமாய் மாறிய மாளவிகா மோகனன்.. தங்கலான் தப்புமா?

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி நடித்துள்ள தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.

கோலார் தங்க சுரங்கம் கதையை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தில் மலைவாழ் மக்களாக சியான் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்ட அனைவரும் நடித்துள்ளனர்.

Malavika Mohanan shares Thangalaan dubbing video

படத்தில் சியான் விக்ரமுக்கு வசனமே இல்லை என பா. ரஞ்சித் சொல்லியிருந்த நிலையில், மாளவிகா மோகனனுக்கும் வசனமே இல்லையா? என்கிற கேள்வியை கிளப்பி உள்ளது தற்போது அவர் வெளியிட்டுள்ள டப்பிங் வீடியோ.

ஞானவேல் ராஜா தயாரிப்பு: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சியான் விக்ரமை வைத்து தங்கலான், சூர்யாவை வைத்து கங்குவா உள்ளிட்ட படங்களை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இயக்குநர் அமீர் உடனான மோதல் காரணமாக சர்ச்சை வெடித்த நிலையில், சமீபத்தில் மன்னிப்பு கேட்டு விட்டு தனது பட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

மாளவிகா மோகனன் டப்பிங்: தங்கலான் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சியான் விக்ரம் இல்லாமல் மாளவிகா மோகனன் மட்டும் காட்டுகின்றனரே என நினைத்த ரசிகர்கள் இவராவது வசனம் பேசுவாரா என்று பார்த்தால் அவதார் ஹீரோயின் போல இவரும் காட்டுப்பூச்சி போல கத்துகிறார். படத்தில் எல்லாருக்கும் இதுதான் வசனமா? என்கிற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் கத்துவதும், வித்தியாசமான ஒலிகளை எழுப்புவதும் போலவே வீடியோ வெளியாகி உள்ளது.

தப்புமா தங்கலான்: பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் கடைசியாக வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியடையாத நிலையில், தங்கலான் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா பா. ரஞ்சித் என்றும் ரசிகர்களை கவரும் விதமாக அந்த படம் இருக்குமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X